மனைவியுடன் இணைந்து நடிப்பேன் : ஆதி | தயாரிப்பாளர்களுக்கு அடுக்குமாடி கட்டிடம் : அரசாணை புதுப்பிப்பு | கபில் சர்மா சம்பளம் 5 கோடி? | சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை: ஷங்கரின் விளக்கம் என்ன? | டிக்கெட் கட்டணம், இரட்டை வரி விதிப்பில் மாற்றம் வருமா? | தியேட்டரில் வெளியாகும் அனுஷ்காவின் 'காதி' டிரைலர் | சவுரவ் கங்குலி பயோபிக் படத்தில் ராஜ்குமார் ராவ் | ஏ.ஆர்.ரஹ்மானின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த சாய்ரா பானு! | மூன்று நாட்கள் மவுன விரதம் கடைபிடித்த சமந்தா! | 'டிராகன்' - பெயருக்காக எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா….. |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், இயக்குனராகவும் இருக்கிறார். அவரது இயக்கத்தில் 'ப பாண்டி, ராயன்' ஆகிய படங்கள் இதற்கு முன்பு வெளிவந்த. 'ப பாண்டி' படம் சுமாரான வெற்றியாகவும், 'ராயன்' படம் 100 கோடி வெற்றியாகவும் அமைந்தது.
அவரது இயக்கத்தில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள 'நிலவுக்கு என் மோல் என்னடி கோபம்' படம் நாளை பிப்ரவரி 21ம் தேதி வெளியாக உள்ளது. 'ப பாண்டி' படத்தில் பிளாஷ்பேக்கிலும், 'ராயன்' படத்தில் முழுமையாகவும் நடித்த தனுஷ் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். முதலிரண்டு படங்களும் முக்கிய நடிகர்கள், நடிகைகள் நடித்த படம்.
ஆனால், 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படம் அறிமுக மற்றும் வளரும் நட்சத்திரங்கள் நடித்துள்ள படம். அதனால், இந்தப் படம் வெற்றி பெறும் பட்சத்தில் இயக்குனராக தனுஷின் இமேஜ் இன்னும் உயரும். இப்படத்தின் பாடல்களுக்கும், டிரைலருக்கும் ஏற்கெனவே இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதால் படமும் வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷின் இயக்கத்தில் நான்காவது படமாக 'இட்லி கடை' உருவாகி வருகிறது. அப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகிறது. இந்த வருடம் தனுஷ் இயக்கத்தில் இரண்டு படங்கள் வெளியாவது ஆச்சரியம்தான்.