ரஜினிக்கு சங்கடம் தரக்கூடாது என நினைத்து டைட்டிலை மாற்றிய முருகதாஸ் | இயக்குனர் ஷங்கரின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை | புரமோஷன் செய்தாலும் ரசிகர்களே வெற்றியை தீர்மானிக்கிறார்கள்: அர்ஜூன் கபூர் | சாவா படத்திற்கு வரி விலக்கு அறிவித்த மத்திய பிரதேச முதல்வர் | 25 நிமிடம் விளம்பரம் போட்டு சோதித்த திரையரங்கம் : ஒரு லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம் | ஜுனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல் படப்பிடிப்பு துவங்கியது | சுந்தரா டிராவல்ஸ் 2ம் பாகத்தின் அப்டேட் | தமிழ் சினிமாவில் 21 ஆண்டுகளை நிறைவு செய்த பிரியாமணி | புன்னகை பூவே சீரியலை விட்டு விலகிய சைத்ரா | இயக்குனராக ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா தனுஷ்? |
2025ம் ஆண்டு ஆரம்பமாகி ஏழு வாரங்கள் முடியப் போகிறது. இந்த ஏழு வாரங்களில் 36 படங்கள் வரை வெளிவந்துள்ளன. அவற்றில் ஒரே ஒரு படம்தான் 100 கோடி வசூலைக் கடந்துள்ளது. அந்த ஒரே படம் அஜித் நடித்து வெளிவந்த 'விடாமுயற்சி'. அவ்வளவு வசூலைக் கடந்தாலும் படம் இன்னும் லாபத்தில் நுழையவில்லை என்பது தகவல்.
விஷால் நடித்து வெளிவந்த 'மத கஜ ராஜா', மணிகண்டன் நடித்து வெளிவந்த 'குடும்பஸ்தன்' ஆகிய படங்கள் முறையே 50 கோடி மற்றும் 25 கோடி வசூலித்துள்ளன. அந்த இரண்டு படங்களும் குறிப்பிடத்தக்க லாபத்தைக் கொடுத்துள்ளன.
இருந்தாலும் 36 படங்களில் ஒரு படம் கூட பெரிய வெற்றி, வசூலைக் குவிக்கவில்லை என்பது அதிர்ச்சிகரமான ஆரம்பமாகவே பார்க்கப்படுகிறது. கடந்த 2024ம் வருடம் மே மாதம் வெளிவந்த 'அரண்மனை 4' படம்தான் முதல் பெரிய வெற்றியாக அமைந்தது.
கடந்த வருடம் போலவே இந்த வருடமும் தாமதமாகத்தான் பெரிய வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 10ம் தேதி தனுஷ் இயக்கம் நடிப்பில் 'இட்லி கடை', அஜித் நடிப்பில் 'குட் பேட் அக்லி' ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. அந்தப் படங்கள்தான் பெரிய வசூலை ஆரம்பித்து வைக்கும் என கோலிவுட்டில் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கை வீண் போகாமல் இருக்கட்டும்.