ஒவ்வொரு முறையும் உங்களை தேர்வு செய்வேன் : நயன்தாரா | சிறப்பு தோற்றத்தில் நடிக்க டேவிட் வார்னருக்கு 2.5 கோடி சம்பளம் | 'பேடி' : ராம் சரணின் 16வது படத்தின் தலைப்பு | எல் 2 எம்புரான் - முதல் தகவல் அறிக்கை | வீர தீர சூரன் ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல் : மன்னிப்பு கேட்ட இயக்குனர் அருண் குமார் | 'டெஸ்ட்' படத்தில் எனது கேரக்டர் ராகுல் டிராவிட்டுக்கு சமர்ப்பணம் : சித்தார்த் | கண்ணப்பா படத்தை கிண்டல் செய்தால் சிவனின் கோபத்திற்கு ஆளாவீர்கள்: நடிகர் ரகு பாபு சாபம் | எனக்கும் காசநோய் பாதிப்பு இருந்தது : சுஹாசினி தகவல் | மம்முட்டிக்காக, மோகன்லால் பிரார்த்தனை செய்த தகவலை நாங்கள் வெளியிடவில்லை : தேவசம் போர்டு மறுப்பு | பிளாஷ்பேக்: வெளியான அனைத்து படங்களும் ஹிட்டான தீபாவளி |
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஏஆர் முருகதாஸ். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் 23வது படத்தை இயக்கி வருகிறார். இப்படம் 2023ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு, கடந்த வருடம் 2024 பிப்ரவரியில் படப்பிடிப்பு ஆரம்பமானது.
ஓரிரு கட்டப் படப்பிடிப்பு நடந்ததும் ஏஆர் முருகதாஸுக்கு ஹிந்தியில் சல்மான் கான் நடிக்கும் 'சிக்கந்தர்' படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. அதனால், இந்தப் படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளார்கள். எனவே, சிவகார்த்திகேயன் 'பராசக்தி' படத்தில் நடிக்கப் போய்விட்டார்.
ஏஆர் முருகதாஸ், 'சிக்கந்தர்' படத்தின் படப்பிடிப்பை முடித்ததும்தான் சிவகார்த்திகேயன் படத்தை மீண்டும் இயக்க வருவார் என்று சொல்கிறார்கள். இந்நிலையில் இந்தப் படத்திற்கான அப்டேட் கொடுத்து நீண்ட நாட்களாகிவிட்டதால் இன்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாளில் படத்தின் பெயரை 'மதராஸி' என அறிவித்துள்ளார்கள்.
இதே பெயரில் அர்ஜுன் இயக்கம் நடிப்பில் 2006ல் ஒரு படம் வெளிவந்தது. அப்படத்தின் பெயரை அவரது அனுமதியுடன்தான் வைத்திருப்பார்கள் என நம்பலாம்.
சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'பராசக்தி' படப் பெயரும் பழைய படப் பெயர்தான். கடந்த வருடம் அவர் நடித்து வெளிவந்த 'அமரன்' படமும் பழைய படத்தின் பெயர்தான்.
“எதிர் நீச்சல், காக்கி சட்டை, வேலைக்காரன், மாவீரன், அமரன், பராசக்தி” ஆகிய பட்டியலில் பழைய படப் பெயருடன் சிவகார்த்திகேயனின் மற்றொரு படமாக 'மதராஸி' இணைகிறது.