ரஜினிக்கு சங்கடம் தரக்கூடாது என நினைத்து டைட்டிலை மாற்றிய முருகதாஸ் | இயக்குனர் ஷங்கரின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை | புரமோஷன் செய்தாலும் ரசிகர்களே வெற்றியை தீர்மானிக்கிறார்கள்: அர்ஜூன் கபூர் | சாவா படத்திற்கு வரி விலக்கு அறிவித்த மத்திய பிரதேச முதல்வர் | 25 நிமிடம் விளம்பரம் போட்டு சோதித்த திரையரங்கம் : ஒரு லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம் | ஜுனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல் படப்பிடிப்பு துவங்கியது | சுந்தரா டிராவல்ஸ் 2ம் பாகத்தின் அப்டேட் | தமிழ் சினிமாவில் 21 ஆண்டுகளை நிறைவு செய்த பிரியாமணி | புன்னகை பூவே சீரியலை விட்டு விலகிய சைத்ரா | இயக்குனராக ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா தனுஷ்? |
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான படம் கனா. கிராமத்தில் இருக்கும் பெண் ஒருவர் எப்படி இந்திய அளவில் கிரிக்கெட் வீராங்கனை ஆக உயர்கிறார் என்கிற கதையைம்சத்துடன் வெளியான இந்த படத்தில் சிவகார்த்திகேயனும் ஒரு கிரிக்கெட் கோச் ஆக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்த இந்த படத்தில் இந்திய கிரிக்கெட் வீராங்கனையான சஜீவன் சஜனாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கேரளாவை சேர்ந்த இவர், நடிகர் சிவகார்த்திகேயன் கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது தனக்கு உதவிய நிகழ்வு ஒன்றை தற்போது நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “ஒரு முறை மழை வெள்ளத்தால் நாங்கள் மிகப்பெரிய அளவில் உடைமைகளை இழந்து பாதிக்கப்பட்ட போது சிவகார்த்திகேயன் என்னை தொடர்பு கொண்டு பேசியதுடன் உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்படுகிறதா என்னிடம் சொல்லுங்கள் என்று கேட்டார். அதற்கு நான், அண்ணா என்னிடம் இருந்த கிரிக்கெட் கிட முழுவதுமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு விட்டது. எனக்கு புதிதாக ஒன்று தேவைப்படுகிறது என கூறினேன். அடுத்த ஒரு வாரத்திற்குள் எனக்கு புதிதாக கிரிக்கெட் கிட் ஒன்றை சிவகார்த்திகேயன் அனுப்பி வைத்தார். இந்த சமயத்தில் தான், நான் சேலஞ்சர் டிராபியில் கலந்து கொள்ள வேண்டி இருந்தது. சிவகார்த்திகேயனின் இந்த உதவி அந்த சமயத்தில் எனக்கு ரொம்பவே பேருதவியாக அமைந்தது” என்று கூறியுள்ளார்.