ரஜினிக்கு சங்கடம் தரக்கூடாது என நினைத்து டைட்டிலை மாற்றிய முருகதாஸ் | இயக்குனர் ஷங்கரின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை | புரமோஷன் செய்தாலும் ரசிகர்களே வெற்றியை தீர்மானிக்கிறார்கள்: அர்ஜூன் கபூர் | சாவா படத்திற்கு வரி விலக்கு அறிவித்த மத்திய பிரதேச முதல்வர் | 25 நிமிடம் விளம்பரம் போட்டு சோதித்த திரையரங்கம் : ஒரு லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம் | ஜுனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல் படப்பிடிப்பு துவங்கியது | சுந்தரா டிராவல்ஸ் 2ம் பாகத்தின் அப்டேட் | தமிழ் சினிமாவில் 21 ஆண்டுகளை நிறைவு செய்த பிரியாமணி | புன்னகை பூவே சீரியலை விட்டு விலகிய சைத்ரா | இயக்குனராக ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா தனுஷ்? |
சமீப வருடங்களாக நடிகர் மம்முட்டி, நடிப்பையும் தாண்டி மம்முட்டி கம்பெனி என்கிற சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கி நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்து வருகிறார். பெரும்பாலான படங்களில் தானே கதாநாயகனாகவும் நடித்து வருகிறார், இவரது தயாரிப்பில் உருவாகும் படங்கள் அனைத்துமே வித்தியாசமான கதைகள் மற்றும் மம்முட்டிக்கான வித்தியாசமான கதாபாத்திரங்களை கொண்டே தயாராகி வருகின்றன, ‛நண்பகல் நேரத்து மயக்கம், பிரம்மயுகம், காதல் ; தி கோர்' என பல படங்களை உதாரணமாக சொல்லலாம். அந்த வகையில் இளம் அறிமுக இயக்குனரும் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‛குறூப்' படத்தில் இணை கதாசிரியராக பணியாற்றியவருமான ஜிதின் கே ஜோஸ் இயக்கத்தில் மம்முட்டி ஒரு புதிய படத்தின் நடித்து வருகிறார்.
வழக்கம் போல இந்த படத்தின் கதையும் கதாபாத்திரமும் தன்னை ஈர்த்ததால், தானே இந்த படத்தை தயாரித்தும் வருகிறார். குறிப்பாக இந்த படத்தில் மம்முட்டி வில்லனாக நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் வில்லன் நடிகரான விநாயகன் நடித்து வருகிறார். இதுவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு ‛கலம்காவல்' என டைட்டில் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில் மம்முட்டி சிகரட்டை தனது வாயில் வைத்து கடிப்பது போன்று அந்த போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது படத்தின் மீது ஒரு விதமான ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கிறது.