மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகையும், தயாரிப்பாளருமான கிருஷ்ணவேணி தனது 101வது வயதில் நேற்று காலமானார். 1924ம் ஆண்டு பிறந்தவர் சிறுவயது முதலே நாடகங்களில் நடித்து வந்தார்.
பிரபல இயக்குனரான புல்லையா, குழந்தைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க 'அனசுயா' என்ற படத்தை இயக்க முடிவு செய்தார். அப்போது 'துலாபாரம்' நாடகத்தைப் பார்த்தவர் அதில் நடித்த கிருஷ்ணவேணியை 'அனசுயா' படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கத் தேர்வு செய்தார்.
அப்போது கிருஷ்ணவேணிக்கு 10 வயது. அவருடன் 60 குழந்தை நட்சத்திரங்கள் நடிக்க அந்தப் படம் முழுவதுமாக கல்கத்தாவில் தயாரானது.
1937ல் சிஎஸ்ஆர் ஆஞ்சநேயலு, கிருஷ்ணவேணியை சென்னைக்கு அழைத்து வந்தார். அதன்பின் பல வெற்றிப் படங்களில் நடித்தார் கிருஷ்ணவேணி. சொந்தக்குரலில் பாடும் திறமையும் கொண்டவர்.
1940ல் மிர்சாபுரம் ராஜா என்ற பிரபல இயக்குனர், தயாரிப்பாளரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் கிருஷ்ணவேணி. அதன்பின் கணவரது தயாரிப்பில் மட்டுமே நடித்து, அவர்களது ஷோபனாச்சலா ஸ்டுடியோவையும் நிர்வாகம் செய்து வந்தார்.
1942ம் ஆண்டு தெலுங்கு நடிகரான என்டி ராமராவை 'மனதேசம்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார் கிருஷ்ணவேணி. அந்தப் படத்தை எல்வி பிரசாத் இயக்கினார்.
கிருஷ்ணவேணி மறைவுக்கு தெலுங்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.