'இட்லி கடை' படத்தின் முதல் பாதி ரெடி! | 'தேரே இஸ்க் மெயின்' படத்தில் பிரபுதேவா? | ரஜினியின் 'கூலி' படத்தின் ஹிந்தி பதிப்புக்கு டைட்டில் மாற்றம்! | தலையில் மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய அஜித்குமார்! | கொக்கைன் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் | சிம்புவின் 50வது படம் டிராப்பா? | ரசிகர்கள் விரும்பும் படத்தை கொடுக்கவில்லை: 'தக் லைப்' தோல்விக்கு மன்னிப்பு கேட்ட மணிரத்னம் | ஆக் ஷன் ஹீரோக்கள் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : கஜோல் | 'கேம் சேஞ்ஜர்' படத்துக்கு பச்சைக்கொடி காட்டியிருக்க கூடாது: தயாரிப்பாளர் தில் ராஜூ புலம்பல் | தமிழ்த் தலைப்புகளும், ஆங்கிலத் தலைப்புகளும் மோதும் ஜுன் 27 ரிலீஸ் |
ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் அதையடுத்து லவ் டுடே படத்தை இயக்கி நடித்தார். தற்போது டிராகன், எல்ஐகே என்ற இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்து முடித்து இருக்கிறார். இதில் டிராகன் படம் வருகிற 21ஆம் தேதி வெளியாகிறது. இந்த இரண்டு படங்களிலுமே அவர் லிப்லாக் காட்சிகளில் நடித்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், என்னை பொறுத்தவரை இந்த இரண்டு படங்களிலுமே லிப்லாக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்றுதான் கூறினேன். அது போன்ற காட்சிகளில் நடித்தால் பேமிலி ஆடியன்ஸ் தியேட்டருக்கு வர மாட்டார்கள் என்று கூறினேன். ஆனால் எல்ஐகே படத்தை இயக்கியுள்ள விக்னேஷ் சிவனோ, அப்படி எல்லாம் எதுவும் இல்லை. லிப்லாக் காட்சி இருந்தால் பேமிலி ஆடியன்ஸ் தியேட்டருக்கு வர மாட்டார்கள் என்றால், அனிமல் படம் எப்படி ஓடி இருக்கும். இப்போதெல்லாம் பேமிலி ஆடியன்ஸ் கூட இது போன்ற காட்சிகளை பார்க்க விரும்புகிறார்கள் என்று என்னை சமாதானப்படுத்தி அந்த காட்சியில் நடிக்க வைத்தார்.
இதேபோல்தான் டிராகன் படத்திலும் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, மாஸ் நடிகர் விஜய்யே லியோ படத்தில் லிப் லாக் காட்சியில் நடித்தார். அதனால் கதைக்கு அவசியம் என்றபோது அது போன்ற காட்சிகளில் நடிப்பதில் தவறில்லை. அதை பேமிலி ஆடியன்ஸ் ஏற்றுக் கொள்வார்கள் என்று சொல்லி நடிக்க வைத்தார். அந்த வகையில், லிப்லாக் காட்சிகளில் நடிக்க கூடாது என்ற முடிவில் இருந்த என்னை, கதைக்கு அவசியப்படும்போது அது போன்ற காட்சிகளில் நடிக்கலாம் என்று சொல்லி இயக்குனர்கள் விக்னேஷ் சிவன், அஸ்வத் மாரிமுத்து ஆகிய இருவரும் லிப்லாக் காட்சியில் நடிக்க வைத்து விட்டதாக கூறுகிறார் பிரதீப் ரங்கநாதன்.