2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தங்கலான் படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் வீரதீரசூரன். சமீபத்தில் சித்தார்த் நடித்த சித்தா படத்தை இயக்கி வெற்றி படமாக கொடுத்த இயக்குனர் எஸ் யு அருண்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. கடந்த வருடத்திலிருந்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதே லைகா நிறுவனத்தின் இன்னொரு தயாரிப்பான அஜித்தின் விடாமுயற்சி படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் வீரதீரசூரன் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.
ஆனாலும் விடாமுயற்சி தாமதமானதால் பொங்கல் வெளியீட்டில் வேறு படங்கள் இடம் பிடித்தன. தவிர பிப்ரவரி 6ம் தேதி விடாமுயற்சியும் வெளியானது. இதைத் தொடர்ந்து மார்ச் 27ம் தேதி வீரதீரசூரன் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. இந்த நிலையில் இந்த ரிலீஸ் தேதியும் தற்போது தள்ளிப் போகலாம் என்கிற சூழல் ஏற்பட்டுள்ளது. காரணம் மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் லூசிபர் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள 'எம்புரான்' திரைப்படம் வரும் மார்ச் 27ம் தேதி பான் இந்தியா திரைப்படமாக வெளியாக இருக்கிறது.
வீரதீரசூரன் தள்ளிப்போவதற்கு காரணம், எம்புரன் படத்தை மோகன்லாலின் ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் வெளியீட்டிலும் லைகா நிறுவனமே கவனம் செலுத்தி வருகிறது. அதனால் ஒரே தேதியில் தங்களது இரண்டு படங்கள் வெளியானால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதை கணக்கில் கொண்டு தான் வீரதீரசூரன் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க முடிவு செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. அனேகமாக ஏப்ரல் மாதம் மாணவர்களின் தேர்வுகள் முடிவடைந்து விடுமுறை துவங்கும் சமயத்தில் வீரதீரசூரன் படத்தை ரிலீஸ் செய்யவும் ஒரு திட்டம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.