நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

அதர்வா நடிக்கும் புதிய படத்திற்கு 'இதயம் முரளி' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பு விழா சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் நடந்தது. இந்த விழாவில் அதர்வா பேசியதாவது :
நீண்ட நாட்களுக்கு பிறகு காதல் படத்தில் நடித்திருக்கிறேன். காதலர் தினத்தில் படத்தின் டைட்டில் மாணவர்கள் முன்னிலையில் வெளியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் அருகில் உள்ள இன்னொரு கல்லூரியில்தான் படித்தேன். அதனால் மாணவர்களின் மனது எனக்குத் தெரியும். காதலை போன்றே வலிமையானது ஒரு தலை காதலும். ஒரு தலை காதலை கடந்துதான் எல்லோரும் வந்திருக்கிறோம்.
இதயம் முரளி என்பது எனது தந்தையை நினைவூட்டுவதாக இருந்தாலும் அந்த நோக்கத்திற்காக வைக்கவில்லை. கதைக்கு பொருத்தமான தலைப்பாகவும் இருந்தது. இதயம் முரளி என்பது தனிப்பட்ட ஒரு கேரக்டர் அல்ல. எல்லோருக்குள்ளும் ஒரு இதயம் முரளி இருக்கிறார். அதன் வெளிப்பாடுதான் இந்த படம்.
நான் நிறைய இடைவெளி விடுவதாக சொல்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. தொடர்ந்து நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இனி அடுத்தடுத்து புதிய பட அறிவிப்புகளை வெளியிடுவேன். காதலர் தினத்தில் நான் சொல்வது எல்லோரும் காதலியுங்கள் அது வெற்றி பெறலாம், தோற்கலாம். ஆனால் வாழ்க்கையில் காதல் முக்கியம். என்றார்.
இந்த படத்தில் அதர்வாவுடன் பிரீத்தி முகுந்தன், கயாடு லோகர், பிரக்யா நக்ரா, நிஹாரிகா, ரக்ஷன், நட்டி உள்பட பலர் நடிக்கிறார்கள். தமன் இசை அமைக்கிறார். ஆகாஷ் பாஸ்கர் தயாரித்து, இயக்குகிறார். கோடை விடுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.