ஒளிப்பதிவாளரைத் தொடர்ந்து இசையமைப்பாளருக்கும் கார் பரிசளித்த சூர்யா | 'கட்டா குஸ்தி 2' படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த விஷ்ணு விஷால்! | தனுஷ் 55வது படத்தில் 'கருப்பு' பட நடிகர்! | தனுஷ் அரசியலுக்கு வருவாரா இயக்குனர் கஸ்தூரிராஜா சொன்ன பதில் | 'கருப்பு' ஒளிப்பதிவாளருக்கு கார் பரிசளித்த சூர்யா | மீண்டும் நடிக்க வந்தார் ரவி மோகன் | 'ஜனநாயகன்' பிரச்னை.. எனக்கு சொல்ல தைரியமில்லை: எச்.வினோத் ஓபன் டாக் | பிளாஷ்பேக்: வியாபார போட்டியில் வென்று, வியப்பில் ஆழ்த்திய ஏ வி மெய்யப்ப செட்டியார் | ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள்?: ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன பதில் | விமர்சனங்களால் பிக்அப் ஆகும் 'பிளாஸ்ட்' |

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த 'விடுதலை' படம் மாற்றத்திற்காக ஆயுதமேந்தி போராடிய நக்சலைட்டுகளை பற்றியதாக இருந்தது. இதில் நக்சலைட் தலைவர் வாத்தியாராக விஜய்சேதுபதி நடித்திருந்தார். அவரை கைது செய்யும் கான்ஸ்டபிளாக சூரி நடித்திருந்தார்.
இந்த படத்திற்கு முன்னோடிய அமைந்த படம் 'அனல் காற்று'. இதனை நாடக எழுத்தாளரான கோமல் சாமிநாதன் இயக்கினார். அவர் நடத்தி வந்த 'சுவர்க்கபூமி' என்ற நாடகம்தான் 'அனல் காற்று' படமானது. இதில் நக்சலைட் தலைவராக ராஜேஷ் நடித்திருந்தார். போலீசை மற்றும் அதிகார மையத்தை எதிர்த்து போராடுவதும், போலீசிடமிருந்து தப்பிக்க தலைமறைவு வாழ்க்கை வாழ்வதும் என அந்தக் கால வாத்தியாராக நடித்தார்.
நக்சலைட் இயக்கத்தில் இணைந்து பின்னர் அதன் போக்கு பிடிக்காமல் விலகும் கதாபாத்திரத்தில் வனிதா நடித்தார். டெல்லி கணேஷ் அகிம்சை வழியில் போராடும் சமூக சேவகராக நடிடித்திருந்தார். படத்திற்கு சங்கர் கணேஷ் இசை அமைத்திருந்தார்.
'விடுதலை' படம் நக்சல்பாரிகளை ஹீரோக்களாக சித்தரித்தது. 'அனல் காற்று' மக்கள் சக்தி மூலமே மாற்றத்தை கொண்டு வர முடியும், நல்சல்பாரிகள் தனிமனித கொலையாளிகள் என்றது. இதுதான் இரண்டு படங்களுக்குமுள்ள முக்கிய வித்தியாசம். படம் 1983ம் ஆண்டு வெளிவந்தது.




