மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
சமீபகாலமாக நாய்களை மையமாக வைத்து ஏராளமான படங்கள் வெளிவந்தது. 'சாட் பூட் த்ரி, வாலாட்டி, நாய்கள் ஜாக்கிரதை, ஓ மை டாக், ராக்கி, கூர்கா, ஜாக்' உள்ளிட்ட பல படங்கள் நாயை மையமாக வைத்து உருவானது. அடுத்து 'சோரன்' என்ற படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் நாயை மையமாக வைத்து மற்றொரு படம் தொடங்கப்பட்டுள்ளது.
பிரியமுடன், ஜித்தன், இரனியன், யூத் உள்பட பல படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வா. அடுத்ததாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி உருவாக்கும் படம் 'சுப்ரமணி'. இந்த படத்தை அவரது உதவி இயக்குனர் ராகுல் பரமஹம்சா இயக்குகிறார். எஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.சவுந்தர்யா தயாரிக்கிறார். ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடிக்கிறார். அகிலேஷ் காத்தமுத்து ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி வின்சென்ட் செல்வா கூறியதாவது: மனிதனின் சிறந்த நண்பன் நாய்கள் மட்டும்தான். புனித நூல்கள், புராணங்கள், வரலாற்றுப் படைப்புகள் இவற்றில் எல்லாம் நாய்கள்தான் மனிதர்களுக்கு சிறந்த துணையாக இருந்திருக்கின்றனர். ஒரு மனிதனுக்கும் நாய்க்கும் இடையிலான ஆரம்பகால உறவு 15,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்ற உண்மை என்னை ஈர்த்தது. தவிர அகிரா குரோசாவா, ஸ்டீபன் கிங், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் உட்பட உலகின் தலைசிறந்த இயக்குநர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மற்றும் பலர் தங்கள் படைப்புகளில் எப்போதும் 'நாய்களை' முக்கியப் கதாபாத்திரங்களாகக் கொண்டு வந்திருப்பதை நான் கவனித்திருக்கிறேன்.
பல வருடங்களாக, நாயை மையக்கருவாகக் கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அது 'சுப்ரமணி' படம் மூலம் நடந்திருக்கிறது. இதில் 'பெல்ஜியன் மாலினோயிஸ்' என்ற அரிய இனத்தைச் சேர்ந்த நாய் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது.
இந்த வகை நாய் ராஜஸ்தானில்தான் நாடோடிகள் சிலர் வளர்த்து வருகிறார்கள். இதை 'பஞ்சாரா நாய்கள்' என அவர்கள் அழைக்கிறார்கள். 'சுப்ரமணி' படம் க்ரைம் திரில்லர் கதையாகும். ஒரு கொலை நடக்கிறது. அதை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக ரிச்சர்ட் நடிக்கிறார். இந்த வழக்கில் அவருக்கு உதவும் நாய்தான் பஞ்சாரா. தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் திவி ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார். 'சலார்' படத்தில் நடித்த ஜெயவாணி முக்கிய வேடம் ஏற்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.