ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

பிரபல நகைச்சுவை நடிகரான தாடி பாலாஜி சமீப காலங்களில் அரசியல் தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன் திமுக அனுதாபியாக தன்னைக் காட்டிக்கொண்ட பாலாஜி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். ஆனால், நடிகர் விஜய்யின் தவெக கட்சி மாநாடு முதல் அவருக்காக வேலைகளை செய்வதுடன், விஜய்யை தனது நெஞ்சில் குடியிருக்கும் தலைவர் எனவும் புகழ்ந்து பேசி வருகிறார். அத்துடன் அவரது உருவத்தையும் தனது நெஞ்சில் பச்சை குத்திக்கொண்டார்.
இந்நிலையில், அவர் பதவி தொடர்பாக அண்மையில் வெளியிட்டிருந்த மீம் ஒன்று மிகப்பெரிய அளவில் ஊடகங்களில் விவாத பொருளானது. அந்த பதிவில் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட கட்சியில் புதிதாக சேர்ந்த சிலருக்கு பதவி கொடுக்கப்படிருப்பதையும், பச்சைக் குத்திக்கொண்ட பாலாஜிக்கு எந்த பொறுப்புகளும் இல்லை என கேலி செய்வது போல் இருந்தது. இதனையடுத்து ஊடகத்தில் விவாத பொருளான தாடி பாலாஜி குறித்தும், அவர் போட்டிருந்த பச்சை குறித்தும் சிலர் மிகவும் கேலி கிண்டல் செய்து பேசினர். அதற்கெல்லாம் தற்போது பதிலடி கொடுக்கும் வகையில் தாடி பாலாஜி நேற்றைய தினம் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், ''என்னை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு? ஒருவரை பற்றி முழுவதுமாக தெரியாமல் ஒருமையில் பேசுவது, பச்சை குத்தினால் பதவி கிடைக்குமா? என கிண்டலாக பேசுவதெல்லாம் அநாகரீகம். இதை நானோ, என் நண்பர் மற்றும் தலைவருமான விஜயோ ஒருபோதும் செய்ய மாட்டோம். அந்த மீம் சில நண்பர்கள் அனுப்பியது. அதை நான் எதார்த்தமாக தான் வாட்ஸப்பில் வைத்தேன். ஆனால், அது இவ்வளவு பெரிய விவாதமாக மாறும் என எதிர்பார்க்கவில்லை. நான் பதவிக்காக விஜய் கட்சியில் பயணிக்கவில்லை. கடைமட்டத் தொண்டனாகவே கூட கடைசி வரை என் தலைவருடன் பயணிப்பேன். என்னை பற்றி என் நண்பர், தலைவர் விஜய்க்கு தெரியும்' என கூறியுள்ளார். மேலும், தமிழகம் முழுவதும் அரசியல் தொடர்பாக சுற்றுப்பயணம் செல்லவுள்ள விஜய்க்கும், ஆதவ் அர்ஜூனாவுக்கும், ஆனந்திற்கும் தனது சார்பில் வாழ்த்துகளையும் அந்த வீடியோவில் தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.