ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு |

'எதிர்நீச்சல்' தொடரின் முதலாவது சீசனில் மதுமிதா ஹீரோயினாக நடித்திருந்தார். அவருடன் அவரது தோழியுமான வைஷ்ணவியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர்கள் இருவரது நட்பு குறித்து சொல்லி தெரிய வேண்டியதில்லை. இன்ஸ்டாகிராமில் இவர்கள் அடிக்கும் லூட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்படுகிறது.
வைஷ்ணவி தற்போது 'புது வசந்தம்' தொடரில் வில்லியாக நடித்து வருகிறார். மதுமிதா விஜய் டிவியில் 'அய்யனார் துணை' என்கிற தொடரில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில், தோழிகள் இருவரும் ஒன்றாக சேர்ந்து ஸ்ரீலங்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கே எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.




