இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
காந்தக் கண்களால் இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தவர். தொலைக்காட்சி தொடர்களால் குடும்பங்களை ரசிகர் பட்டாளமாக்கியவர். 'ஜோ' திரைப்படத்தில் 'அத்தான்' என்ற ஒற்றை வார்த்தையால் அனைவரின் மனதையும் வென்ற 'வைஷ்ணவி' நம்முடன் பகிர்ந்தது.
பிறந்து வளர்ந்தது புதுக்கோட்டை. என்னை மருத்துவம் படிக்க வைக்க பெற்றோருக்கு விருப்பம். அதனால் கோவையில் கல்லுாரி ஒன்றில் பிசியோதெரபிஸ்ட் முடித்தேன். சட்டம் படிக்க வேண்டும் என்ற ஆசையால் பி.ஏ., ஆங்கிலம் முடித்தேன்.சென்னைக்கு யு.பி.எஸ்.சி.,க்காக படிக்க வந்த நேரத்தில் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் செய்து பதிவிட்ட வீடியோ பிரபலமாகி தொலைக்காட்சி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது பல சீரியல்களில் கதாநாயகியாக தொடர்ந்து நடித்து வருகிறேன்.
நண்பர் மூலமாக 'ஜோ' திரைப்படத்தில் கதாநாயகனுக்கு கொழுந்தியாவாக நடிக்க வாய்ப்பு வந்தது. கொழுந்தியா கதாபாத்திரம் சாதாரணமாக இருக்கும் என நினைத்து நடித்தேன். ஆனால் கதையை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும் கதாபாத்திரமாக அமைந்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தால் எனக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி, அனைவரும் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளும் அளவிற்கு பெயர் பெற்று கொடுத்தது. பின் தெலுங்கில் 'தல்லி மனசு' திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தேன். சக நடிகரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டேன். தற்போது பொறுப்புகள் அதிகரித்து இருப்பதால் வீடு, வேலை இரண்டையும் சரியாக வழி நடத்த கணவர் உறுதுணையாக உள்ளார்.
சீரியல் சூட்டிங்கிற்கு காலையில் வீட்டில் இருந்து சென்றால் வீடு திரும்ப இரவு ஆகிவிடும். தொலைக்காட்சியில் நடிக்க புதிது புதிதாக ஆடைகள் வழங்குவார்களாமே என பலரும் கேட்பது உண்டு. ஒவ்வொரு முறையும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான ஆடைகளை தேர்ந்தெடுத்து சொந்தமாக வாங்குகிறோம். ஒரு சீரியலில் பொருத்தமான கதாபாத்திரத்திற்கு தேர்வாகி நடிக்க துவங்கி விட்டால் தொடர் வருமானம் கிடைக்கும். இந்த நிலையான வருமானத்திற்காக சினிமாவில் இருந்து பலரும் சின்னத்திரைக்கு வருகிறார்கள்.
சின்னத்திரை சூட்டிங் ஸ்பாட், சினிமாவைவிட சற்று மாறுபட்டதாக இருக்கும். இங்குள்ள சக நடிகர், நடிகைகள் ஒரு குடும்பம் போல் ஒன்றாக இணைந்து தொடர் முழுவதும் பயணிப்பதால் ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொன்றை புதிதாக கற்றுக் கொள்ள முடியும்.சினிமாவில் கிராமத்து கதாபாத்திரங்களில் அதிகமாக நடிக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. சீரியல்களில் தொடர்ந்து நடிப்பதால் சினிமா வாய்ப்புகளுக்கு போதிய நேரம் ஒதுக்குவதில் சிரமம் உள்ளது.
சின்னத்திரையில் நடிப்பவர்கள், சினிமாவில் நடிப்பவர்கள் என பிரித்து பார்க்காமல் திறமைக்கு மதிப்பு தந்தால் நன்றாக இருக்கும்.