மணிரத்னம் இயக்கத்தில் நவீன் பொலிஷெட்டி | கமல் சார் படங்களை 30, 40 முறைக்கு மேல பார்த்திருக்கேன் - த்ரிஷா | ராம் கோபால் வர்மாவின் 'சாரி' : 28ம் தேதி வெளியாகிறது | தமிழ் படங்களில் நடிக்க தமிழ் கற்று வரும் கன்னட நடிகை | அரசுகள் தொழில்நுட்ப வளர்ச்சியை கட்டுப்படுத்த கூடாது : கமல்ஹாசன் கோரிக்கை | பிளாஷ்பேக் : எம்ஜிஆர் விழா நடத்தி விருது கொடுத்த இயக்குனர் | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோ | நடிகை வைபவி சாண்டில்யா திருமணம் | 'டிராகன், நி.எ.மே.எ.கோபம்' : முதல் நாள் வசூல் | பிரபுதேவா நிகழ்ச்சி : வருத்தத்துடன் விலகுவதாக சிருஷ்டி டாங்கே அறிவிப்பு |
மலையாள திரையுலகில் சர்ச்சைக்குரிய அதேசமயம் சர்வதேச விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை பெறும் படங்களாக தொடர்ந்து எடுத்து வருபவர் இயக்குனர் சனல்குமார் சசிதரன். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ‛காயட்டம்' என்கிற படத்தை இயக்கினார். மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவரும் சமீப காலமாக தமிழில் தனுஷ், அஜித், ரஜினி உள்ளிட்ட பலருக்கு ஜோடியாக நடித்து வருபவருமான நடிகை, நடித்ததுடன் அவரே அந்த படத்தை தயாரித்தும் இருந்தார். ஆனால் படம் முடிவதற்குள் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இயக்குனரிடமிருந்து ஒதுங்கிய நடிகை படத்தை வெளியிடுவதிலும் ஆர்வம் காட்டவில்லை.
ஆனால் சம்பந்தப்பட்ட நடிகைக்கு சிலரால் ஆபத்து என்றும் அவரை தன்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் சோசியல் மீடியாவில் வீடியோ ஒன்றை பேசி வெளியிட்டார் இயக்குனர் சனல்குமார். ஆனால் தேவையில்லாமல் தன் மீது அவதூறு பரப்புவதாக கூறி காவல்துறையில் நடிகை அளித்த புகாரில் சனல் குமார் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளி வந்தார். இது 2022-ல் நடந்தது. தற்போது கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் இயக்குனர் சனல்குமார் சசிதரன் சம்பந்தப்பட்ட நடிகை மீது கடந்த முறை கூறியது போன்று சில விஷயங்களை கூறியதுடன் காயட்டம் படத்தை தான் யூடியூப்பில் இலவசமாக வெளியிடுவேன் என்றும் இங்கே தனக்கு மிரட்டல்கள் இருப்பதால் அமெரிக்கா செல்ல இருக்கிறேன் என்றும் கூறியிருந்தார்.
இப்போதும் சம்பந்தப்பட்ட நடிகை தன்மீது அவதூறு செய்தி பரப்புவதாக அவர் மீது காவல்துறையில் புகார் அளித்தார். அதே சமயம் இயக்குனர் சனல்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் சொன்னபடி அமெரிக்காவிற்கு கிளம்பி சென்று விட்டார். இந்த நிலையில் கேரளாவில் ஆலுவா மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இந்த வழக்கு தொடர்பாக சமீபத்தில் நடிக்கையிடம் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது. இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அமெரிக்காவில் இருக்கும் இயக்குநர் சனல்குமாரை இந்தியாவிற்கு வரவழைப்பதற்காக லுக் அவுட் நோட்டீஸ் நீதிமன்றத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அவரை இந்தியாவிற்கு வரவழைப்பதற்கான முயற்சியில் காவல்துறையினர் இறங்கி உள்ளனர்.