தக் லைப் குறித்த கேள்விக்கு கலகலப்பாக பதிலளித்த கமல்ஹாசன் | புஷ்பா 2வில் பெண் வேடத்தில் நடிக்க பயந்த அல்லு அர்ஜுன் | ஜெயம் ரவியை தொடர்ந்து பெயரை மாற்றிய கவுதம் கார்த்திக் | கும்பமேளாவில் வெளியிடப்பட்ட தமன்னாவின் ஓடேலா 2 டீசர் | நாதஸ்வரம் சீரியல் நடிகை ஸ்ரித்திகா வளைகாப்பு : வாழ்த்திய பிரபலங்கள் | மணிரத்னம் இயக்கத்தில் நவீன் பொலிஷெட்டி | கமல் சார் படங்களை 30, 40 முறைக்கு மேல பார்த்திருக்கேன் - த்ரிஷா | ராம் கோபால் வர்மாவின் 'சாரி' : 28ம் தேதி வெளியாகிறது | தமிழ் படங்களில் நடிக்க தமிழ் கற்று வரும் கன்னட நடிகை | அரசுகள் தொழில்நுட்ப வளர்ச்சியை கட்டுப்படுத்த கூடாது : கமல்ஹாசன் கோரிக்கை |
சமீபத்தில் வெளிவந்த அஜித்தின் விடாமுற்சி, 'பிரேக்டவுன்' என்ற ஆங்கில படத்தின் தழுவல் என்று ரசிகர்கள் கணித்து சொல்லிவிட்டார்கள். ஹாலிவுட்டோ, கொரியனோ எந்த மொழி படத்தை காப்பி அடித்தாலும் ரசிகர்கள் கண்டுபிடித்து அதை வெட்டவெளிச்சமாக்கி விடுவார்கள். காரணம் இப்போது அவர்கள் ஓடிடி தளங்கள் மூலம் உலக படங்களை பார்த்து வருகிறார்கள். சினிமா பற்றிய தேடலும் அதிகம். ஆனால் அந்த காலத்தில் அப்படியில்லை ஜேம்ஸ் பாண்ட், ஜாக்கி சான் படங்கள் முக்கியமான சில படங்கள் மட்டுமே இந்தியாவில் வெளியாகும். அதுவும் ஆங்கிலத்தில்தான் வெளியாகும்.
இப்படியான காலகட்டத்திலேயே சிவாஜி நடிப்பில் வெளியான 'கருடா சௌவுக்யமா' என்ற படம் ஹாலிவுட்டில் வெளியான 'காட்பாதர்' படத்தின் தழுவல் என்று கண்டுபிடித்து சொல்லிவிட்டார்கள். கதைப்படி சிவாஜி பகலில் ஒரு அச்சகம் நடத்துவார், இரவில் ஊழல் செய்து சேர்த்து வைத்திருப்பவர்களின் வீட்டுக்குள் புகுந்து அதை கொள்ளை அடித்து ஏழை மக்களுக்கு கொடுத்து விட்டு வருவார். இது அவரது குடும்பத்துக்கே தெரியாது. தெரிய வரும்போது என்ன நடக்கிறது என்பதுதான் படம்.
'காட்பாதர்' படத்தின் மைய கருதான் இந்த படத்தின் கதை. மற்றபடி திரைக்கதை நம்ம ஊருக்கு ஏற்ற மாதிரி மாற்றி எழுதப்பட்டிருக்கும். சிவாஜியுடன் சுஜாதா, தியாகராஜன், அம்பிகா, மோகன், ராஜலட்சுமி உள்பட பலர் நடித்திருந்தனர். வியட்நாம் வீடு சுந்தரம் கதை, திரைக்கதை, வசனம் எழுதினார், கே.எஸ்.பிரகாஷ் ராவ் இயக்கி இருந்தார்.