ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

ஒரு படத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட கிளைமாக்ஸ் வைத்து ரசிகர்களுக்கு என்ன பிடிக்கிறதோ அந்த கிளைமாக்சோடு படத்தை வெளியிடுவது பிற்காலத்தில் ஏற்பட்ட ஒரு வழக்கம். இதுவும் அபூர்வமாகத்தான் நடக்கும். குறிப்பாக கே.பாக்யராஜ், மணிரத்னம் ஆகியோர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தமிழில் இதனை தொடங்கி வைத்த படம் 'மஹாமாயா' (1944).
பிற்காலத்தில் பஞ்சு அருணாசம், ஆர்.செல்வராஜ், சுஜாதா போன்று அந்தக் காலத்தில் திரைப்பட நட்சத்திர எழுத்தாளராக இருந்தவர் இளங்கோ. அன்றைய முன்னணி நட்சதத்திரங்களான தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா ஆகியோருக்கு ஆஸ்தான எழுத்தாளராக இருந்தார். இளங்கோவின் கதை என்றால் எந்த கேள்வியும் கேட்காமல் நடிப்பார்கள்.
அப்படிப்பட்ட இளங்கோ எழுதிய கதைதான் 'மஹாமாயா'-. இதை எழுதுவதற்கு அவர் ஒரு வருடம் எடுத்துக் கொண்டார். கதையை எழுதி முடித்ததும் அதற்கு மூன்று கிளைமாக்சை எழுதினார். அதனை தயாரிப்பாளர் எம்.சோமசுந்தரம், இயக்குனர் டி.ஆர்.ரகுநாத்திடம் கொடுத்தார். அவர்களுக்கும் எந்த கிளைமாக்சை வைப்பது என்பதில் குழப்பம். இதனால் மூன்று கிளைமாக்சையும் படமாக்கி, பிறகு அதனை ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும், திரையுலகினருக்கும் போட்டு காட்டி பெரும்பாலானவர்கள் சொன்ன கிளைமாக்சையே படத்தில் வைத்தார்கள்.
மன்னரின் வாளில் எந்த பெண்ணாவது மாலை அணிவித்து விட்டால் அந்த பெண் மன்னருக்கு சொந்தம் என்பது பொதுவான நியதி. மன்னர் பி.யு.சின்னப்பா வாளுக்கு மஹாமாயாவான கண்ணாம்பா விளையாட்டாக மாலை அணிவித்து விடுகிறார். அப்போது அது விளையாட்டாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. கண்ணாம்பாவுக்கு திருமணமான பிறகு அவரது அழகில் மயங்கும் சின்னப்பா வாளுக்கு மாலையிட்டதால் அவர் எனக்கே சொந்தம் என்கிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
இந்த படத்தில் பி.யு.சின்னப்பா, பி.கண்ணாம்பா, எம்.ஜி.சக்ரபாணி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், எம்.எஸ்.சரோஜா, ஆர்.பாலசுப்ரமணியம், டி.பாலசுப்ரமணியம், எஸ்.வி. சஹஸ்ரநாமம், எம்.கே.மீனலோச்சனி, 'பேபி' டி.டி.குசலாம்பாள், டி.ராஜ்பாலா மற்றும் டி.ஆர்.பி.ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.