ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

எச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் படத்திற்கு 'ஜன நாயகன்' என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டு நேற்று இரண்டு போஸ்டர்களையும் வெளியிட்டிருந்தார்கள். ஆனால், பட வெளியீட்டுத் தேதி எப்போது என்பது அறிவிக்கப்படவில்லை. அக்டோபர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளிவரும் என்று திரையுலகத்தில் பேசப்படுகிறது. ஆனால், அக்டோபர் மாதமே படம் வெளிவந்துவிடும் என்பதுதான் உறுதியான தகவல்.
இன்னும் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு வர வேண்டிய படத்தின் தலைப்பை இப்போதே அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்று ஒரு கேள்வி எழுந்தது. விஜய்க்கு சரியான போட்டியாக இருக்கும் ஒரே நடிகர் அஜித். கடந்த சில பல வருடங்களாகவே இருவருக்குமான திரையுலக மோதல், சமூக வலைத்தள மோதல் அதிகமாகவே இருக்கிறது.
இந்நிலையில் அஜித்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பே திரையுலகில் ஒரு தகவல் கசிந்துள்ளது. அப்படி அறிவிக்கப்பட்டால் அது விஜய்க்கு ஒரு 'இமேஜ் டேமேஜ்'--ஐ ஏற்படுத்தும். விஜய்க்கு முன்பாகவே அஜித்துக்கு இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்று வழங்கப்படுவது அஜித்தின் பெருமையை உயர்த்துவதாக அமையும்.
சமீபத்தில் அவர் கார் ரேஸில் கலந்து கொண்ட போது அது இந்திய அளவிலான கவனத்தை மட்டும் ஈர்க்காமல் உலக அளவிலான கவனத்தை ஈர்த்தது. விஜய் அரசியல் களத்தில் இறங்கினாலும் இன்னும் ஒரு ஆரம்ப கட்ட அங்கீகாரம் கிடைக்கவில்லை. எனவே, இந்த சமயத்தில் அஜித் மீதான ஊடகங்களின் பார்வையை திசை திருப்பவே படத் தலைப்பு அறிவிப்பை வெளியிட்டார்களாம்.
ரசிகர் மன்றம் இல்லாமல், எந்த பட்டப் பெயர் உள்ளிட்ட சினிமாவில் சலசலப்பை ஏற்படுத்தும் விஷயம் எதுவும் செய்யாமல் அஜித்துக்குக் கிடைக்கும் வரவேற்பும், முக்கியத்துவமும் விஜய் தரப்பை எரிச்சலூட்டுகிறது என்று சொல்கிறார்கள். எதற்கெடுத்தாலும் வாழ்த்து சொல்லும் வழக்கத்தை வைத்திருக்கும் விஜய், இதுவரையில் அஜித்திக் கார் ரேஸ் வெற்றி குறித்தும், பத்ம பூஷன் விருது குறித்தும் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




