வெப் தொடருக்காக ஒன்றிணையும் மாதவன், துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக்! | தனுஷின் அடுத்த ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ஜனநாயகன் பட தயாரிப்பாளர் உடன் கைகோர்க்கும் போர் தொழில் பட இயக்குனர்! | ஆறு மாதத்திற்கு முன்பே சம்பளம் தந்த கமலுக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன் | ரூ. 25 கோடி வசூலைக் எட்டிய குடும்பஸ்தன் படம்! | தனுஷ், தமிழரசன் பச்சமுத்து படத்திற்கு இசையமைக்கும் அனிருத்! | ‛‛எந்த விபத்தும் ஏற்படவில்லை, நலமுடன் இருக்கிறேன்'' - நடிகர் யோகி பாபு விளக்கம் | சினேகனின் குழந்தைகளுக்கு பெயர்சூட்டிய கமல்ஹாசன் | 5 வருட காதலை வெளிப்படையாக அறிவித்த அருண் - அர்ச்சனா | சிம்பு 51வது படம் ‛மன்மதன்' பாணியில் உருவாகிறதா? |
நடிகர்கள் அஜித் குமார், பாலகிருஷ்ணா, சேகர் கபூர், ஆனந்த் நாக், நடிகை ஷோபனா ஆகியோருக்கு இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நமது நாட்டில் கலை, அறிவியல் சமூகப்பணி, பொதுப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம்,கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயிரிய விருதான பத்ம விபூஷண், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ, ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி கவுரவித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் இந்த விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி இந்தாண்டுக்கான விருதுகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.
இதில் கலைத்துறையில் சிறந்த விளங்கியதற்காக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், நடிகை ஷோபனா ஆகியோருக்கு பத்ம பூஷன் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான அஜித் இன்று 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார். சினிமா தவிர்த்து கார் ரேஸிலும் அசத்தி வருகிறார். இந்நிலையில் கலைத்துறையில் இவரது திறமையை கவுரவிக்கும் வகையில் இந்த விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதேப்போல் 80 - 90 களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஷோபனா. தமிழில் எனக்குள் ஒருவன் படத்தின் மூலம் அறிமுகமாகி ரஜினி, கமல், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார். மலையாளத்திலும் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர் பிறமொழிகளிலும் நடித்துள்ளார். பரதநாட்டியத்தில் சிறந்து விளங்கும் இவர் இப்போதும் தனது மனதுக்கு பிடித்த படங்களில் நடித்து வருகிறார்.
இவர்கள் தவிர்த்து தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணா, கன்னட நடிகர் ஆனந்த் நாக், பாலிவுட் நடிகர் சேகர் கபூர் ஆகியோருக்கும் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு பத்ம பூஷன் விருது பெற்றவர்கள்
டி.கே.பட்டம்மாள்
எஸ்எஸ் வாசன்
பம்மல் சம்பந்த முதலியார்
எம்எஸ் சுப்புலட்சுமி
பாபநாசம் சிவன்
வீணை எஸ் பாலசந்தர்
குமாரி கமலா
பானுமதி ராமகிருஷ்ணா
சிவாஜிகணேசன்
சோ
இளையராஜா
பி.சுசீலா
கேஜே யேசுதாஸ்
ரஜினிகாந்த்
கமல்ஹாசன்
வைரமுத்து
எஸ்பி பாலசுப்ரமணியம்
வாணிஜெயராம்
ஏஆர் ரகுமான்
விஜயகாந்த்