மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா தெலுங்கிலும் நுழைந்து அங்கு முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்துவிட்டார். தற்போது ஹிந்தியிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஆகிவிட்டார். ஹிந்தியில் அவர் நடித்து வெளிவந்த 'அனிமல்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்துயும், ஹிந்தியில் அதிகம் வசூலித்த 'புஷ்பா 2' படத்தின் வசூலும் அவரை டாப் நடிகையாக்கிவிட்டது.
ராஷ்மிகா மந்தனா தற்போது சரித்திரப் படமான 'சாவா' என்ற ஹிந்திப் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. யு டியுப் தளத்தில் 35 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. மராட்டிய மன்னரான சத்ரபதி சம்பாஜி மகாராஜ் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் இது. இப்படத்தில் மகாராணி யேசுபாய் என்ற கதாபாத்திரத்தில் ராஷ்மிகா நடித்துள்ளார். அடுத்த மாதம் 14ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.
இப்படத்தில் தென்னிந்திய நடிகையான ராஷ்மிகா எப்படி மராட்டிய மகாராணியாக நடிக்கத் தேர்வு செய்தீர்கள் என இயக்குனர் லஷ்மண் உடேகரிடம் கேட்டுள்ளார்கள். அதற்கு அவர், “ராஷ்மிகாவின் கண்களில் ஒரு தூய்மை இருக்கும்,” என்று பதிலளித்துள்ளார். ஹிந்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அடுத்த படமாக 'சாவா' படம் இருக்கிறது.




