ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி | நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் | 39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் |
இயக்குனர் பாரதிராஜா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நடித்து வரும் 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதில் அவரது ஜோடியாக வடிவுக்கரசி நடித்துள்ளார். பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை படத்தில் சிவாஜி ஜோடியாக வடிவுக்கரசி நடித்தார்.
இந்த படத்தில் நட்டி நட்ராஜ், ரியோ ராஜ், நடன இயக்குனர் சாண்டி, விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், நிவாஸ் ஆதித்தன், சல்மா, சுரேஷ் மேனன், 'ஆடுகளம்' நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி , விக்னேஷ் காந்த், ரிஷிகாந்த், கனிகா, ஆதிரா, காவ்யா அறிவுமணி ,துளசி, ஐரா கிருஷ்ணன், லிசி ஆண்டனி, நமோ நாராயணன், சுரேஷ் சக்கரவர்த்தி, ஏகன், விஜித், ஜீவா சினேகா, திண்டுக்கல் சரவணன், பாலாஜி தயாளன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் பிரிட்டோ இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். தேவ் பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. தற்போது இதன் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது.
படம் பற்றி இயக்குனர் பிரிட்டோ கூறும்போது “நான்கு விதமான வாழ்க்கை - நான்கு கதைகள் - அதை இணைக்கும் ஒரு புள்ளி என நம் வாழ்வில் உறவுகளின் அவசியத்தை உணர்வுபூர்வமாக விவரிக்கும் கமர்சியல் படமாக இப்படம் உருவாகி இருக்கிறது. மும்பை - வேளாங்கண்ணி - சென்னை - திருத்தணி என நான்கு வெவ்வேறு களங்களில் இப்படத்தின் கதை நடைபெறுகிறது. படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்திருக்கிறது. தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கி உள்ளன” என்றார்.