சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் | ‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு |

லீடர், ஹேப்பி டேஸ், லவ் ஸ்டோரி உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா. தற்போது முதல் முறையாக தமிழ், தெலுங்கு மொழியில் தனுஷ், நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரை வைத்து 'குபேரா' படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
சேகர் கம்முலா அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, "குபேரா படத்தின் கதை தயாரானதும் தனுஷிடம் கூற விரும்பினேன். இதற்கு முன் அவருடன் பணியாற்றியதும் இல்லை, சந்தித்ததும் இல்லை. அதனால் அவருக்கு என்னை தெரிந்திருக்க வாய்ப்பில்லை என தயக்கத்துடன் இருந்தேன். அதன் பின்னர் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவருக்குப் பிடித்த என் படங்களை எல்லாம் சந்தோஷமாக கூறி என்னை வியக்க வைத்தார்" என தெரிவித்துள்ளார்.