‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு |
காமெடியனாக மட்டுமின்றி அவ்வப்போது சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார்கள் யோகி பாபு. அதோடு சமீப காலமாக யோகி பாபு திருப்பதி, திருத்தணி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல ஆலயங்களில் அவரை பார்க்க முடிகிறது. தான் மட்டுமின்றி தனது குடும்பத்துடன் சென்று அவர் சாமி தரிசனம் செய்து வருகிறார். அதோடு தனது கழுத்திலும், கையில் கடவுள் நம்பிக்கை அடிப்படையில் சில கயிறுகளையும் அவர் கட்டியுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யோகி பாபுவிடம், உங்கள் கையில் பல கயிறுகளை கட்டி இருக்கிறீர்களே.. என்ன காரணம்? என்று மீடியாக்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு யோகி பாபு, ''இதெல்லாம் சாமி விஷயம். நம்முடைய முன்னோர்கள் உருவாக்கிய விஷயம். அதனால் இதைப் பற்றி இதற்கு மேல் பேச வேண்டாம். அதோடு இந்த இடத்தில் இது தேவையில்லாத கேள்வி'' என்றும் ஒரு நறுக் பதில் கொடுத்தார் யோகி பாபு.