அஜித்தின் 'டாப் வசூல்' படமாக மாறுமா 'குட் பேட் அக்லி' | நடிகர் நானிக்கு ஓடிடி-யில் அடித்த ஜாக்பாட் | குபேரா : தெலுங்குக்கே முன்னுரிமை? | மகனுக்காக திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தி அன்னதானம் செய்த பவன் கல்யாண் மனைவி | 6 மாதத்தில் 15 கிலோ எடை குறைத்த ரஜிஷா விஜயன் | குஞ்சாக்கோ போபன் - பாவனா எதிர்பாராத சந்திப்பு | ஹிந்தி படத்தில் கரீனா கபூருக்கு ஜோடியாக இணைந்த பிரித்விராஜ் | இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார் | ஒரே நாளில் 3 படங்கள் ; மூன்றிலும் வீணடிக்கப்பட்ட வில்லன் நடிகர் | ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து திரைக்கு வந்த 'கேம் சேஞ்சர்' படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. இந்நிலையில் அடுத்தபடியாக தெலுங்கில் 'உப்பெனா' என்ற படத்தை இயக்கிய புஜ்ஜி பாபு சனா இயக்கும் தனது 16வது படத்தில் நடிக்கிறார் ராம்சரண். இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் உடன் 'தேவரா' என்ற படத்தில் நடித்த ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு மைசூர் மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜனவரி 27ம் தேதி முதல் மீண்டும் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. சிவராஜ்குமார், ஜெகபதிபாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கிராமத்துக் கதையில் உருவாகும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு 'பெடி' என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.