தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் |
தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்க 2017ல் கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிவிக்கப்பட்ட சரித்திரப் படம் 'சங்கமித்ரா'. படம் அறிவிக்கப்பட்ட சில மாதங்களில் அப்படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் விலகினார். அவருக்குப் பதிலாக திஷா பதானி நடிப்பதாகவும் அறிவித்தார்கள்.
ஆனால், ஏழு வருடங்களாகியும் படப்பிடிப்பு ஆரம்பமாகாமல் இருந்தது. இந்நிலையில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 50 வது ஆண்டு அடுத்த வருடம் கொண்டாடப்பட உள்ளது. அதற்காக 'சங்கமித்ரா' படத்தை மீண்டும் உருவாக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில் படத்தை மீண்டும் ஆரம்பிக்க உள்ளார்களாம். படத்தில் யார் யார் நடிக்கப் போகிறார்கள் என்பதும் மற்ற கலைஞர்கள் பற்றியும் அறிவிப்புகள் அடுத்தடுத்து வரலாம்.
தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தற்போது 'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்' படத்தைத் தயாரித்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 24ல் இப்படம் வெளியாக உள்ளது. இதையடுத்து மேலும் சில படங்களை வினியோகவும் செய்யவும், தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார்களாம்.