அத்துமீறியதாக புகார் கூறிய நடிகை: நேரிலேயே மன்னிப்பு கேட்ட ஷைன் டாம் சாக்கோ | கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் |
சுந்தர் சி இயக்கத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் நடிக்க சில ஆண்டுகளுக்கு முன் சங்கமித்ரா பட அறிவிப்பை வெளியிட்டனர். கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தபட போஸ்டரை வெளியிட்டு அமர்க்களம் செய்தனர். சரித்திர கதையில் இந்த படத்தை உருவாக்க திட்டமிட்டு இருந்தார் சுந்தர் சி. ஆனால் பொருளாதார பிரச்னையால் இந்த படம் அப்போது டிராப் ஆனது.
இந்நிலையில் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளதாக தொடர்ச்சியாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் படத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாம். குறிப்பாக நாயகன் ஜெயம் ரவி விலகிவிட்டார். அவருக்கு பதில் விஷால் நடிப்பதாக செய்திகள் வந்தன. இப்போது நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அவருக்கு கணிசமான தொகையை சம்பளமாக தரவும் பேசி வருகின்றனராம்.