இத்தனை வயதிலும் பிகினியில் அசத்தும் ஸ்ரேயா | நான் உயிர் உள்ள மனுஷி - சாய் பல்லவி | மீண்டும் புத்துயிர் பெறும் 'சங்கமித்ரா' | சினிமாவில் வெற்றி தான் முக்கியம் : மணிகண்டன் | நீக் படத்திற்கு எஸ்.ஜே.சூர்யா விமர்சனம் : தனுஷ் நன்றி | முதல் 3 நாட்களில் 12 கோடி வசூலித்த கங்கனாவின் 'எமர்ஜென்சி' | 2025ல் ராஷ்மிகாவின் முதல் படம் பிப்ரவரி 14ல் வெளியாகிறது! | பிரேமலு 2ம் பாகம் அப்டேட் | காதலியை மணந்தார் இயக்குனர் அஜய் ஞானமுத்து | கவுதம் மேனன் இயக்கத்தில் ரவி மோகன் |
நடிகர் மணிகண்டன் குட் நைட், லவ்வர் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றது தொடர்ந்து தற்போது குடும்பஸ்தன் என்கிற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற ஜனவரி 24ந் தேதி அன்று திரைக்கு வருகிறது. இதற்கான புரமொஷன் நிகழ்ச்சியில் மணிகண்டன் ஈடுபட்டு வருகிறார்.
அவர் கூறியதாவது, "தவறு செய்து அதில் இருந்து கற்றுக் கொள்வது தான் வாழ்க்கை. ஆனால், சினிமாவில் வெற்றி பெற்றால் தான் நிலைத்து நிற்க முடியும். முந்தைய காலகட்டத்தில் 4, 5 படங்களின் தோல்விகளுக்கு பிறகு நீங்கள் வெற்றி பெற்றால் போதும். ஆனால் இப்போது அந்த கால இடைவெளி குறைந்து விட்டது. இப்போதெல்லாம் ஒரு தோல்வி படம் கொடுத்தால் அதிலிருந்து மீண்டு வர ஜந்து வருடங்களாகிவிடும். அதற்குள் உங்கள் ஐடியா பழசாகிவிடும். அதனால் இப்போது வெற்றி என்பது மிகவும் முக்கியமான ஒன்று" என்கிறார்.