இத்தனை வயதிலும் பிகினியில் அசத்தும் ஸ்ரேயா | நான் உயிர் உள்ள மனுஷி - சாய் பல்லவி | மீண்டும் புத்துயிர் பெறும் 'சங்கமித்ரா' | சினிமாவில் வெற்றி தான் முக்கியம் : மணிகண்டன் | நீக் படத்திற்கு எஸ்.ஜே.சூர்யா விமர்சனம் : தனுஷ் நன்றி | முதல் 3 நாட்களில் 12 கோடி வசூலித்த கங்கனாவின் 'எமர்ஜென்சி' | 2025ல் ராஷ்மிகாவின் முதல் படம் பிப்ரவரி 14ல் வெளியாகிறது! | பிரேமலு 2ம் பாகம் அப்டேட் | காதலியை மணந்தார் இயக்குனர் அஜய் ஞானமுத்து | கவுதம் மேனன் இயக்கத்தில் ரவி மோகன் |
ராயன் படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கியுள்ள அடுத்த படம் ' நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' . இதில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்தியூ தாமஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வருகின்ற பிப்ரவரி 21ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.
கடந்த சில நாட்களாக இந்த படத்தை தனுஷின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்கள் பார்த்து பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த எஸ்.ஜே. சூர்யா இது குறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "தனுஷ் உடன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை பார்த்தேன். ஜாலியாக இருந்தாலும் எமோசனல் மற்றும்தனித்துவமான படமாக இருந்தது. தனுஷுக்கு ஒரு கேள்வி ராயன் படத்திற்கு பிறகு பிஸியாக இருந்தபோதும் எப்படி உடனே ஒரு ஜாலியான படத்தை எடுத்தீர்கள்? படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்" என இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்து தனுஷ் வெளியிட்ட பதிவில், ‛‛நேரம் ஒதுக்கி எங்கள் படத்தைப் பார்த்ததற்கு நன்றி சார். படம் உங்களுக்கு பிடித்தது மகிழ்ச்சி. உங்கள் விமர்சனத்தால் எங்களது குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்'' என குறிப்பிட்டுள்ளார்.