என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
பாலிவுட் இளம் நடிகர் அர்ஜுன் கபூர், ஜாக்கி பக்னானி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மேரே ஹஸ்பண்ட் கி பீவி'. இந்த படத்தை முடாசர் ஆசிஷ் என்பவர் இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சி மும்பையில் உள்ள இம்பீரியல் பேலசில் உள்ள ராயல் பாம்ஸ் என்கிற இடத்தில் படமாக்கப்பட்டது. இந்த பாடல் காட்சிக்காக தற்காலிக அரங்கு ஒன்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. விஜய் கங்குலி இந்த பாடலுக்கான நடன காட்சிகளை இயக்கி வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மேற்கூரையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் நடனம் ஆடிக்கொண்டிருந்த அர்ஜுன் கபூர், ஜாக்கி பக்னானி மற்றும் சில நடன கலைஞர்கள் மீது விழுந்தது.
பெரிய அளவு ஆபத்து இல்லை என்றாலும் அனைவருக்கும் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டன. இது குறித்து தொழிலாளர் சம்மேளன தலைவர் கூறும்போது, “அந்த கட்டடம் ரொம்பவே பழமை வாய்ந்த கட்டடம். அது மட்டுமல்ல நடன காட்சிக்காக பயன்படுத்தப்பட்ட ஸ்பீக்கர்களில் அதிக அளவு ஒலி எழுப்பப்பட்டதால் அந்த அதிர்வு தாங்காமல் மேற்கூறையின் ஒரு பகுதி சரிந்து விழுந்து உள்ளது” என்று கூறியுள்ளார்.