தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
தமிழில் துல்கர் சல்மான் நடித்த ‛கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' மற்றும் ‛நித்தம் ஒரு வானம், மார்க் ஆண்டனி' போன்ற படங்களில் நடித்தவர் ரிது வர்மா. அதோடு, விக்ரம் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கி உள்ள ‛துருவ நட்சத்திரம்' படத்திலும் நடித்திருக்கிறார். தெலுங்கில் சந்தீப் கிஷனுடன் அவர் நடித்துள்ள ‛மசகா' என்ற படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் தெலுங்கு நடிகர் வைஷ்ணவ் தேஜ், ரிது வர்மா இருவரும் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் டேட்டிங் செய்து வருவதாகவும், அவர்களுக்கிடையே தீவிரமான காதல் இருப்பதாகவும் டோலிவுட் மீடியாக்கள் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், இதுவரை வைஷ்ணவ் தேஜ், ரிது வர்மா இருவரும் ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்காத நிலையில், நடிகை நிக்காரிகா மூலம் வைஷ்ணவுக்கும், ரிது வர்மாவுக்குமிடையே நட்பு ஏற்பட்டு, அதுவே இப்போது காதலாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதோடு சமீபத்தில் துபாயில் அவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.