துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் | ‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா |

2025ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு மூன்று வெவ்வேறு நாட்களில் ஆறு தமிழ்ப் படங்கள் வெளியாகின. ஜனவரி 10ல் வெளியான 'வணங்கான், மெட்ராஸ்காரன்' படங்களில் 'வணங்கான்' படத்திற்கு ஓரளவிற்கு நல்ல விமர்சனங்கள் வெளிவந்தன. இருந்தாலும் வியாபாரா ரீதியாக பெரிய வசூலை இப்படம் குவிக்கவில்லை. படத்தில் நடித்த அருண் விஜய்க்கு மட்டும் பாராட்டுக்கள் குவிந்தன. 'மெட்ராஸ்காரன்' படம் மெட்ராஸில் கூட குறிப்பிடும்படி வசூலைப் பெறவில்லை.
ஜனவரி 12ல் வெளிவந்த 12 வருட பழைய படமான 'மத கஜ ராஜா' படம் யாரும் எதிர்பார்க்காத பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. தற்போது வரை 30 கோடி வசூலைப் பெற்றுள்ளது. இந்த வாரத்திற்குள் 50 கோடி வசூலைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சினிமா வரலாற்றில் இத்தனை வருட பழைய படம் புத்தம் புதிதாக வெளியாகி வசூலில் சாதனை படைப்பது இதுவே முதல் முறை.
ஜனவரி 14ல் வெளிவந்த 'காதலிக்க நேரமில்லை, நேசிப்பாயா, தருணம்' ஆகிய படங்களில் 'தருணம்' படத்தை ஒரே நாளில் தியேட்டர்களில் திரையிடுவதை நிறுத்திவிட்டார்கள். வேறொரு நாளில் படத்தை மீண்டும் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். 'நேசிப்பாயா' படம் மிகச் சுமாரான வரவேற்பைப் பெற்றுள்ளது. 'காதலிக்க நேரமில்லை' படத்திற்கு 'ஏ' சென்டர்களில் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனாலும், வசூல் சுமாராகத்தான் உள்ளது.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை 2025 பொங்கல் ஓரளவே இனிப்பான பொங்கலாக மட்டுமே அமைந்துள்ளது. ஆறு படங்களில் ஒரே ஒரு படம் மட்டுமே வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் இனிப்பான வசூலைக் கொடுத்துள்ளது என்பதுதான் பாக்ஸ் ஆபீஸ் தகவல்.