ஏஜ தொழில்நுட்பத்தில் தயாராகும் முதல் இந்திய படம் | ஓடிடியில் நேரடியாக வெளியான ஹாலிவுட் படம் | பிளாஷ்பேக் : ஜெயலலிதாவை பாடகியாக்கிய கே.வி.மகாதேவன் | பிளாஷ்பேக் : இன்று 'ஆலம் ஆரா' பிறந்தநாள் | இளையராஜாவிற்கு அரசின் சார்பில் விழா : முதல்வர் ஸ்டாலின் | புஷ்பா கேரக்டரில் நடிக்க மறுத்தேன் - ரேஷ்மா பசுபுலேட்டி | பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு சினிமாவில் நடந்த அவமானம் | ரன்யா ராவ் கதாநாயகியாக நடித்த வாகா திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் | மோகன்லாலின் அன்பு கட்டளையை மீற முடியவில்லை : விவேக் ஓபராய் | ரஜினியின் மனைவியாக நடிக்க வாய்ப்பு என கூறி பணம் பறிக்க முயற்சி : நடிகை எச்சரிக்கை |
மும்பையில் பாலிவுட்டின் பிரபல நடிகர் சைப் அலிகான் வீட்டுக்குள் நள்ளிரவில் நுழைந்த கொள்ளையன் அவரை, ஆறு முறை கத்தியால் குத்தியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சிசிடி கேமரா அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சைப் அலிகானின் மனைவியும், நடிகையுமான கரீனா கபூர் வெளியிட்ட பதிவில், ‛‛இந்தநாள் நம்ப முடியாத அளவுக்கு சவாலாக எங்கள் குடும்பத்திற்கு இருந்திருக்கிறது. நடந்த சம்பவத்தை எங்களால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. இந்த கடினமான சூழலில் யூகங்களை தவிர்க்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். தொடர்ச்சியாக அதுபோன்ற செய்திகள் வருகின்றன. இந்த விஷயத்தில் கவனம் செலுத்தினால் அது எங்களது பாதுகாப்பிற்காக அச்சுறுத்தலாக அமையும். இதிலிருந்து நாங்கள் வெளியே வர ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறேன். எங்களுக்கு துணையாக இருந்த அனைவருக்கும் நன்றி'' என தெரிவித்துள்ளார்.
தப்பிய கரீனா
இதனிடையே சம்பவம் நடந்த அன்று கரீனா கபூர் வீட்டில் இல்லை என தெரிய வந்துள்ளது. அன்றை தினம் அவரது தனது சகோதரி கரீஷ்மா கபூர், நடிகை சோனம் கபூர் ஆகியோருடன் பார்ட்டியில் இருந்ததாக தெரிகிறது. ஒருவேளை அன்று அவரும் வீட்டில் இருந்திருந்தால் இவரும் அந்த சம்பவத்தில் காயம் அடைந்திருப்பார் என சொல்கிறார்கள்.