ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' | 'கேம் ஆப் த்ரோன்ஸ்' புதிய தொடர் வெளியானது: உலகம் முழுக்க வரவேற்பு | 'மாஸ்டர் பிளான்' படத்தில் பொலிட்டிக்கல் பிளாக் காமெடி | வில்லனாக நடிக்க விரும்பும் முனீஷ்காந்த் | பிளாஷ்பேக்: 'நிழல்கள்' ராதுவை தெரியுமா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 பேருக்கு வாழ்வளித்த கண்ணதாசன் |

வெற்றி பெறாத படங்களுக்கு சக்சஸ் மீட் கொண்டாடி வரும் நிலையில் உண்மையான ஒரு வெற்றிப் படத்திற்கு இன்று(ஜன., 17) சக்சஸ் மீட் கொண்டாட உள்ளார்கள். சுந்தர் சி இயக்கத்தில், விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம் மற்றும் பலர் நடிப்பில் 12 வருடங்களுக்கு முன்பு உருவான படம் 'மத கஜ ராஜா'. பல்வேறு காரணங்களால் வெளியீடு தள்ளிப் போய் தள்ளிப் போய் கடந்த ஞாயிறன்று வெளியானது.
முதல் காட்சியிலிருந்தே இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. முதல் நாள் வசூலை விட அடுத்தடுத்த நாட்களின் வசூல் ஏறுமுகமாகவே இருந்தது. கடந்த ஐந்து நாட்களில் இப்படத்தின் வசூல் 30 கோடிக்கு வந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வாரம் முழுவதும் விடுமுறை நாட்கள் என்பதால் படம் எளிதில் 50 கோடி வசூலைக் கடந்துவிடும்.
படத்தின் வெற்றி படக்குழுவினர் அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இயக்குனர் சுந்தர் சி, விஷால், வரலட்சுமி, அஞ்சலி ஆகியோர் இப்படத்திற்காக கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து புரமோஷன் செய்து வருகிறார்கள். படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இன்று காலை சக்சஸ் மீட்டை நடத்த உள்ளார்கள்.




