அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' | 'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? |
சமூக வலைதளத்தின் மூலம் பிரபலமாகி சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மிருணாளி ரவி. சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு எம்.ஜி.ஆர். மகன், கோப்ரா, எனிமி, ரோமியோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் மிருணாளி ரவி ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் கூறுகையில், " பொங்கல் நேரத்தில் நான் இதுவரை மதுரை வந்ததில்லை. இப்போது ஊரே திருவிழா கோலமாக உள்ளது. மதுரை பொண்ணு போன்று பேச ஆசையாக உள்ளது. எனக்கு மதுரை வட்டார வழக்கு பேச்சு பேச தெரியாது. ஆனால், வாய்ப்பு வந்தால் கற்றுக்கொண்டு நடிப்பேன் .அது எனக்கு சரியாக வரவில்லை என்று யாரும் சொல்லி விடக்கூடாது. மதுரை பொண்ணு மாதிரி பேசி விட்டார் என்று சொன்னால் போதும்" என்றார்.