தெலுங்கில் பிசியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் | மீண்டும் மல்டி ஸ்டார் படம் இயக்குகிறார் மணிரத்னம் | திருமணம் செய்து கொண்டு திருப்பதியில் செட்டிலாக ஆசைப்படும் ஜான்வி கபூர் | சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் |
கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேலாக மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஷங்கர் - ராம்சரண் கூட்டணியில் உருவாகியுள்ள கேம் சேஞ்ஜர் திரைப்படம் நேற்று வெளியானது. இதற்கு முன்பு வெளியான ஷங்கரின் இந்தியன் 2 திரைப்படம் தோல்வியடைந்த நிலையில் இந்த படத்தை ஷங்கர் ஆவலுடன் எதிர்பார்த்தார். ஆனால் படம் சுமாரான வரவேற்பையே பெற்றுள்ளது. இந்த நிலையில் 3 மணி நேரம் ஓடக்கூடிய இந்த படத்தில் இருந்து நானா ஹைரானா என்கிற பாடல் நீக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் இந்த பாடலை ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் ஏமாற்றம் அடைந்தனர்.
ராம்சரண், கியாரா அத்வானியின் டூயட் பாடலாக உருவாகியுள்ள இந்த பாடல் நியூசிலாந்தில் உள்ள விதவிதமான லொக்கேஷன்களில் படமாக்கப்பட்டு உள்ளது. யு-டியூப்பில் இந்த பாடல் வெளியான போது இந்த பாடல் ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றது. அதுமட்டுமல்ல இந்திய சினிமாவில் முதல் முதலாக அகச்சிவப்பு கதிர் கேமராவினால் இந்த பாடல் படம் பிடிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த பாடல் சிலர் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இந்த படத்தில் இணைக்கப்படவில்லை என்றும் வரும் ஜனவரி 14-ஆம் தேதி முதல் இந்த பாடல் படத்தில் இடம்பெறும் என்றும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.