ஜிம்மில் ராஷ்மிகா காயம் : படப்பிடிப்பு தள்ளிவைப்பு | என்னை முதன்முறையாக அறைந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தான் ; வெங்கடேஷ் தகவல் | கேம் சேஞ்சர் படத்தில் நானா ஹைரானா பாடல் இடம்பெறாதது ஏன்? | மதுரை பெண் போல் நடிக்க ஆசை - மிருணாளி ரவி | சிறப்புக் காட்சிகளை ரத்து செய்தது ஆந்திர உயர்நீதிமன்றம் | துபாய் கார் ரேஸில் இருந்து விலகினார் அஜித் | இட்லி கடை படம் எமோஷனலாக இருக்கும் - நித்யா மேனன் | 7 ஆண்டுகளுக்கு பின் த்ரி விக்ரம் படத்திற்கு இசையமைக்கும் அனிரூத் | குடும்பஸ்தன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ராஜூ முருகன், சசிகுமார் பட படப்பிடிப்பு நிறைவு |
தெலுங்கில் ஷங்கர் - ராம்சரண் கூட்டணியில் கேம் சேஞ்ஜர் என்கிற பெரிய படம் வெளியாகி உள்ள நிலையில் ஜன-12ல் பாலகிருஷ்ணாவின் 'டாக்கு மகராஜ், ஜனவரி 14ல் வெங்கடேஷ் நடிப்பில் சங்கராந்தி வஸ்துனம், ஆக்கிய படங்களும் ரிலீஸ் ஆகின்றன. இதில் இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கி உள்ள சங்கராந்தி வஸ்துனம் படத்தில் கதாநாயகிகளாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சமீபத்தில் கோட் படம் மூலம் பிரபலமான மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாவதை தொடர்ந்து படக்குழுவினர் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணா நடத்தும் டாக்ஷோ போலவே நடிகர் ராணா டகுபதியும் ஒரு டாக் ஷோ நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் சங்கராந்தி வஸ்துனம் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதில் பேசும் போது நடிகர் வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷுடனான ஒரு காட்சி பற்றி பேசும்போது அவர் தனது கன்னத்தில் மாறி மாறி அறைய வேண்டும் என்றும், ஆனால் கொஞ்சம் வேகமாகவே அறைந்து விட்டார் என்றும் கூறினார்.
அதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ், “மெதுவாகத்தான் அடித்தேன் உங்களுக்கு வலிக்கவில்லையா என்று கேட்டபோது இன்னும் கொஞ்சம் வேகமாக அடி என்றார். அதன் பிறகு தான் ஓங்கி அறைந்தேன்” என்று கூறியவர் இதுவரை நீங்கள் யாரிடமாவது கன்னத்தில் அரை வாங்கி இருக்கிறீர்களா என்று கேட்க, அதற்கு வெங்கடேஷ் இதுதான் முதல் முறை என்று கூறினார்.