கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது அவற்றிற்கு நடுஇரவு 1 மணி காட்சிகள், அதிகாலை 4 மணி காட்சிகள் என தென்னிந்திய மாநிலங்களில் நடைபெற்று வந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னையில் 'துணிவு' பட அதிகாலை காட்சியின் போது இளைஞர் ஒருவர் மரணம் அடைந்தார். அதன்பின் தமிழகத்தில் அதிகாலை காட்சிகளுக்கான அனுமதி வழங்குவது நிறுத்தப்பட்டது.
கடந்த மாதம் 'புஷ்பா 2' படம் வெளிவந்த போது ஹைதராபாத்தில் நடந்த நெரிசலில் பெண் ஒருவர் மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி இல்லை என தெலங்கானா அரசு அறிவித்தது. ஆனால், 'கேம் சேஞ்ஜர்' படத்திற்கு யு டர்ன் போட்டு அனுமதி வழங்கியது. இதையடுத்து தெலங்கானா உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி பல கேள்விகளை எழுப்பினார். அனுமதி தர மாட்டோம் என்று சொல்லிவிட்டு அனுமதி வழங்கியது ஏன் என்றும் கேட்டார். தூக்கத்தைக் கெடுத்து சினிமா பார்க்க வேண்டுமா என்றும் கேட்டுள்ளார். வழக்கை ஜனவரி 24ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
இதனிடையே, ஆந்திர உயர்நீதிமன்றம் இது குறித்து தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி அனுமதி வழங்கப்பட்ட அதிகாலை 1 மணி 4 மணி காட்சிகளை ரத்து செய்துள்ளது. அதனால், பொங்கல் வெளியீட்டில் எந்த தெலுங்குப் படத்திற்கும் அதிகாலை காட்சிகள் நடக்காது.
வரும் நாட்களில் ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சிறப்புக் காட்சிகள், சிறப்புக் கட்டண உயர்வு ஆகியவற்றிற்கு அனுமதி வழங்கப்பட வாய்ப்பில்லை. நீதிமன்றம் தலையிட்டுவிட்டதால் மாநில அரசுகள் அப்படியான அனுமதியிலிருந்து பின் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.