போதைப்பொருள் வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது? | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… | ஆமிர்கான் படத்திற்கு மகேஷ்பாபு பாராட்டு | விஜய்க்கு வாழ்த்து போட்டோ: பரபரப்பை ஏற்படுத்திய திரிஷா | தென்னிந்தியப் படங்கள் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன : பவன் கல்யாண் | 'ஹிட் 3' மீது கதை திருட்டு வழக்கு | விஜய் மல்லையாவை பார்த்து குடிப்பதை நிறுத்தினேன்: ராஜு முருகன் சொல்கிறார் | விஜயதேவரகொண்டா மீது வன்கொடுமை வழக்கு பதிவு | பிளாஷ்பேக்: கங்கை அமரனை நம்பி ஏமாந்த ஏவிஎம் |
2025ம் ஆண்டு பொங்கல் பரபரப்பாக ஆரம்பமாகும் என கடந்த வருடம் எதிர்பார்த்தார்கள். அஜித் நடித்த 'விடாமுயற்சி' பொங்கல் வெளியீடு என அறிவிக்கப்பட்டதே அதற்குக் காரணம். ஆனால், திடீரென படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைத்தார்கள்.
அதனால், திடீரென பத்து படங்களுக்கு மேல் பொங்கல் வெளியீடு என அறிவிக்கப்பட்டது. அடுத்து அவற்றில் சில படங்களும் பின்வாங்கியது. நேற்று ஜனவரி 10ம் தேதி 'வணங்கான், மெட்ராஸ்காரன்' ஆகிய இரண்டு தமிழ்ப் படங்களும், தெலுங்கிலிருந்து டப்பிங்கான 'கேம் சேஞ்ஜர்' படமும் வெளிவந்தது.
இவற்றில் 'கேம் சேஞ்ஜர்' படத்திற்கு தமிழில் போதிய வரவேற்பு இல்லை. பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வந்த 'வணங்கான்' படத்திற்கு சுமாரான வரவேற்பு கிடைத்துள்ளது. சுமார் 40 சதவீத அளவிற்கு டிக்கெட்டுகள் முன்பதிவாகி வருகின்றது. 'மெட்ராஸ்காரன்' படம் எந்த வரவேற்பும் பெறவில்லை.
நாளை 'மத கஜ ராஜா' படம் மீது ஓரளவிற்கு எதிர்பார்ப்பு உள்ளது. அதற்கான முன்பதிவுகளும் சுமாராக உள்ளது. 12 வருட கால பழைய படம் என்பதுதான் படத்தின் மைனஸ். அதை மீறி படம் நன்றாக அமைந்துவிட்டால், இந்தப் படம் ஒரு கொண்டாட்டத்தை ஏற்படுத்திவிடும்.
ஜனவரி 14 பொங்கலன்று வெளியாக உள்ள 'காதலிக்க நேரமில்லை, நேசிப்பாயா, தருணம்' ஆகிய படங்களும் தற்போது வரை எந்த பரபரப்பையும் ஏற்படுத்தவில்லை. வெளியாகும் தினத்தன்று படத்தைப் பார்த்த பிறகு படம் பற்றிப் பேசினால்தான் உண்டு.
'விடாமுயற்சி' படத்தின் சென்சார் முடிந்துவிட்டது. ஜனவரி 23 அல்லது 30 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்புதான் தமிழ் சினிமாவில் பரபரப்பு தொற்றிக் கொள்ளும்.