பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
மலையாள நடிகை பார்வதி தனக்கு மனதில் தப்பு எனப்படும் விஷயத்தை உடனடியாக சுட்டிக்காட்டி பேசி விடுவார். இதனாலேயே அவருக்கு மலையாள திரை உலகின் மறைமுகமான எதிர்ப்பு நிறைய இருக்கிறது. மேலும் தன்னைப் போன்ற சக நடிகைகள் சிலரை சேர்த்துக்கொண்டு சினிமா பெண்கள் நல அமைப்பு ஒன்றை துவங்கி திரையுலகில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் வெளியான ஹேமா கமிஷன் அறிக்கை காரணமாக பல பெண்கள் துணிச்சலாக வெளியே வந்து தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நிகழ்வுகள் குறித்து வெளிப்படையாக கூறி சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல் துறையிலும் புகார் அளித்தனர். இதில் பெரும்பாலும் சீனியர் நடிகர்கள் தான் இப்படி குற்றச்சாட்டுக்கு ஆளாகினர்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்வதியிடம் இது பற்றி கேட்டபோது, “சீனியர் நடிகர்களாவது கொஞ்சம் பரவாயில்லை. இன்றைய இளம் நடிகர்களில் சில பேர் இதைவிட ரொம்பவே மோசமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு சீனியர் நடிகர்களுக்கு கிடைத்த வாய்ப்பு வசதி தங்களுக்கு கிடைக்கவில்லையே என்கிற வயிற்றெரிச்சலிலும் கோபத்திலும் இருக்கிறார்கள். (என்ன வாய்ப்பு, வசதி என்பதை பார்வதி குறிப்பிடுகிறார் என தெரியவில்லை) தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரிந்தாலும் அது குறித்து அவர்களுக்கு துளியும் கவலை இல்லை. தரக்குறைவான வார்த்தைகளை சுலபமாக பயன்படுத்துகிறார்கள். சில நேரங்களில் இது போன்ற இளம் நடிகர்களுடன் இணைந்து நடிக்க வேண்டி வந்துவிடுமோ என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். நல்ல வேலையாக அது போன்று நடக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
சொல்லப்போனால் மலையாளத்தில் அவர் கடந்த சில வருடங்களில் நடித்தது வெறும் இரண்டு மூன்று படங்களில் தான். அதுவும் முன்னணி ஹீரோக்களுடன் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் துல்கர் சல்மான், பஹத் பாசில் போன்றவர்களை விட பார்வதி சீனியர் என்பதால் அவர் இளம் ஹீரோக்கள் என யாரை குறிப்பிடுகிறார் என்கிற விவாதமும் தற்போது எழுந்துள்ளது.