இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
தமிழ் சினிமாவின் பிரமாண்டமான இயக்குனர் என்று பேசப்படுபவர் ஷங்கர் 'ஜென்டில் மேன் முதல் இந்தியன் 2' வரை அவர் இயக்கிய 13 தமிழ்ப் படங்களில் கடைசியாக வந்த 'இந்தியன் 2' படம்தான் தோல்வியைத் தழுவியது. அவருக்கு கடுமையான விமர்சனங்களையும் பெற்றுத் தந்தது.
அவர் முதல் முறையாக தெலுங்கில் இயக்கியுள்ள 'கேம் சேஞ்ஜர்' படம் நாளை பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. இயக்குனர் ஷங்கருக்கு இது முக்கியமான ஒரு படம். 'இந்தியன் 2' படத்தில் அவர் இழந்த பெயரை இந்த 'கேம் சேஞ்ஜர்' படம் பெற்றுத் தந்தாக வேண்டும். அப்போதுதான் அடுத்து அவர் இயக்க உள்ள படங்களுக்கான வரவேற்பும் அதிகமாக இருக்கும்.
ஷங்கருக்கு மட்டுமல்ல நாயகன் ராம் சரணுக்கும் இது முக்கியமான படம். 'ஆர்ஆர்ஆர்' படம் ராஜமவுலி இயக்கம், ஜுனியர் என்டிஆருடன் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என இருந்தது. அதற்குப் பின் தனி நாயகனாக ராம் சரண் பெறப் போகும் வெற்றியும் எதிர்பார்க்கப்படும். ஷங்கர், ராம் சரண் இருவருக்கும் அடுத்த கட்ட மாற்றத்திற்கு 'கேம் சேஞ்ஜர்' வெற்றி மிக முக்கியமானது.