'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' |
1999ம் ஆண்டில் வெளிவந்த 'சேது' படம் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் பாலா. அதன்பின் 'நந்தா, பிதாமகன், நான் கடவுள்' ஆகிய படங்கள் அவருடைய சிறந்த படைப்புகளாக அமைந்தன. அந்தப் படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் விக்ரம், சூர்யா, ஆர்யா ஆகியோர் காலூன்றக் காரணமாக அமைந்தார்.
அதன்பின் அவர் இயக்கத்தில் வெளிவந்த 'அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார், வர்மா' ஆகிய படங்களில் 'பரதேசி' படம் மட்டுமே தரமான ஒரு படைப்பாக இருந்தது. மற்ற படங்களில் பாலாவின் முத்திரை பதிக்கப்படவில்லை. 2018ல் வெளிவந்த 'நாச்சியார்' படத்திற்குப் பிறகு கடந்த ஏழு வருடங்களுக்கும் மேலாக பாலாவின் படம் ஒன்று தியேட்டர்களில் வெளியாகவில்லை.
நாளை அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள 'வணங்கான்' படம் வெளியாகிறது. மீண்டும் பழைய பாலாவை இந்தப் படத்தில் பார்க்க முடியுமா என்று ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.