இயக்குனர் சசி உடன் இணையும் நடிகர் சசிகுமார்! | கவுதம் மேனன், ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் இணைந்த விஷால்! | ரஹ்மானின் முன்னாள் மனைவி என சொல்லாதீர்கள்: சாய்ரா பானு வேண்டுகோள் | நடிகை பிந்து கோஷ் காலமானார் | தமிழகத்தில் 1000 தியேட்டர்களில் வெளியாகும் அஜித்தின் ‛குட் பேட் அக்லி' | முதலில் பேபி அடுத்து பேப்! அமலாபால் வெளியிட்ட வீடியோ பதிவு | 'பராசக்தி' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் | நயன்தாரா - விக்னேஷ் சிவனின் பிரம்மாண்ட ஹோம் ஸ்டுடியோ! | வெளியீட்டிற்குத் தயாரான சமந்தாவின் முதல் தயாரிப்பு 'சுபம்' | சம்பளத்தை உயர்த்த கமிஷன் வெட்டும் டிராகன் |
1981ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி வெளிவந்த படம் 'சட்டம் ஒரு இருட்டறை'. சந்திரசேகருக்கு இது இரண்டாவது படம், விஜயகாந்துக்கு திருப்பம் தந்த படம். ரஜினிகாந்த் போன்று பெரிய நடிகராக வேண்டும் என்று மதுரையில் இருந்து புறப்பட்டு வந்த விஜயராஜா, தனது பெயரை விஜயகாந்த் என்று மாற்றிக் கொண்டு சினிமா வாய்ப்பு தேடி வந்தார். சில படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு பெரிய வெற்றி கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அமைந்து அவரை ஆக்ஷன் ஹீரோவாக்கிய படம்தான் 'சட்டம் ஒரு இருட்டறை'.
இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு சட்டம் ஒரு இருட்டறை 'செட்டனிக்கு காலு நீவு' என்ற பெயரில் தெலுங்கிலும், 'மாட்டுவின் சட்டங்களே' என்ற பெயரில் மலையாளத்திலும், 'நீயாவு எல்லிடே' என்ற பெயரில் கன்னடத்திலும் ரீமேக் ஆனது. இந்தியில் 'அந்தா கானூன்' என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் விஜயகாந்த் நடித்த கேரக்டரில் ரஜினி நடித்தார், பூர்ணிமா ராவ் நடித்த கேரக்டரில் ரீனா ராய் நடித்தார். ரஜினியின் அக்காவாக ஹேமமாலினி நடித்தார். அமிதாப் பச்சன் ரஜினிக்காக சிறப்பு தோற்றத்தில் நடித்தார். படம் இந்தியிலும் சூப்பர் ஹிட்டாகி ரஜினியை பாலிவுட்டில் ஆக்ஷன் ஹீரோவாக நிலை நிறுத்தியது.