ஏவிஎம் சரவணன் படத்தயாரிப்பை நிறுத்தியது ஏன்? | கை கட்டியபடி பேசுவார், வெள்ளை உடைகளை விரும்பி அணிவார்: பணிவுக்கும் உபசரிப்புக்கும் புகழ் பெற்ற ஏவி.எம்.சரவணன் | பிரபலங்கள் பட்டியல் 2025: தமிழ் நடிகர்கள், நடிகைகளுக்கு இடமில்லை… | சாய் பல்லவியால் மறுவாழ்வு பெற்றேன் ; இசையமைப்பாளர் நெகிழ்ச்சி | திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார் | சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி |

இசை அமைப்பாளர் கங்கை அமரன் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் சிவகங்கை மற்றும் மானா மதுரை பகுதியில் நடந்து வருகிறது. இதற்காக சிவகங்கை சென்ற கங்கை அமரன் அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்து நடித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
உடனடியாக மானா மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்கு அங்கு போதிய வசதிகள் இல்லாததால் அவர் சிவகங்கை மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் தற்போது நலமாக இருப்பதாக கூறிய மருத்துவமனை நிர்வாகம் அவர் உடல் நலத்தில் என்ன பிரச்னை என்பதை தெரிவிக்கவில்லை.
இன்று அவர் மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகிறார். இதை தொடர்ந்து கங்கை அமரனின் மகன்களான வெங்கட்பிரபு மற்றும் பிரேம்ஜி மதுரை சென்றுள்ளனர்.