என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 'மிஸ் யூ' என்கிற திரைப்படம் வெளியானது. என்.ராஜசேகர் என்பவர் இயக்கிய இந்த படத்தில் கதாநாயகியாக ஆஷிகா ரங்கநாத் நடித்திருந்தார். கடந்த பல வருடங்களாகவே காதல் படங்களுக்கு குட் பை சொல்லிவிட்டு வித்தியாசமான கதாபாத்திரங்கள், கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த சித்தார்த், நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் நடித்த ரொமான்ஸ் படமாக இது வெளியானது.
இந்த படத்தின் கதை ரொம்பவே வித்தியாசமாக இருந்ததால் அதனால் ஈர்க்கப்பட்டு இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்றும் இப்போதும் காதல் கதைகளுக்கு வரவேற்பு இருக்கிறது என்றும் கூறிய சித்தாரத் இந்த படத்தை மிக தீவிரமாக புரமோட் செய்து பேசி வந்தார்.
படம் ஓரளவுக்கு நல்ல பெயர் பெற்றாலும் சித்தார்த் எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு இது வரவேற்பை தரவில்லை. இந்த நிலையில் சித்தார்த் மற்றும் (பேபி) ஷாமிலி நடிப்பில் கடந்த 2009ம் வருடம் தெலுங்கில் 'ஓய்' என்கிற படம் வெளியானது. முழுக்க முழுக்க லவ் ஸ்டோரியாக வெளியாகியிருந்த இந்த படம் கடைசியில் கதாநாயகிக்கு ஏற்படும் சோக முடிவுடன் முடிந்ததால் ரசிகர்களிடம் பெரிய அளவு வரவேற்பை பெற தவறியது.
இந்த நிலையில் தற்போது வரும் ஜனவரி 1 புத்தாண்டு தினத்தன்று இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்வதாக இந்த படத்தை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிறுவனம்தான் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை தயாரித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.