2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

பாலிவுட்டில்
தற்போது இளம் நடிகர் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி ஆகியோர்
நடித்துள்ள 'பேபி ஜான்' என்கிற திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.
இயக்குனர் அட்லி தயாரித்துள்ள இந்த படத்தை ஜீவா நடித்த 'கீ' என்கிற படத்தை
இயக்கிய காலீஸ் இயக்கியுள்ளார். அட்லி தயாரிப்பு என்பதால் இந்த படம்
வெளியாவதற்கு முன்பே இது விஜய் நடித்த தெறி படத்தின் ரீமேக் தான் என்பது
போல சொல்லப்பட்டு வந்தது. ஆனால் அட்லி உள்ளிட்ட படக்குழுவினர் இதை
மறுத்தார்கள். இந்த நிலையில் வருண் தவான் இந்த படத்திற்காக தான் தயாரான
விதம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இது
குறித்து அவர் கூறும்போது, “இந்த படத்தின் கதை தன்னிடம் சொல்லப்பட்ட
பின்னர், நடிகர் ரஜினிகாந்த் அவரது படங்களில் நடித்த பல ஸ்டைலான
காட்சிகளும் அதை பின்பற்றி மற்ற நடிகர்கள் எப்படி அவரைப் போலவே ஸ்டைல்
காட்டி வளர்ந்தார்கள் என்பது போன்று அவர்களது படங்களில் இருந்து பல
காட்சிகளும் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு
எனது கதாபாத்திரத்தில் இதே ரஜினி ஸ்டைலை சற்று வித்தியாசமாக பண்ணுவதற்கு
முயற்சி செய்யுங்கள் என்றும் சொன்னார்கள். இத்தனை வருடங்களாக ரஜினிகாந்தின்
ஸ்டைல் குறையாமல் இருப்பதும் அவரை பின்பற்றி பல நடிகர்கள் அதேபோன்று
ஸ்டைல் செய்து வளர்ந்ததும் ஆச்சரியப்படுத்துகிறது என்று கூறியுள்ளார் வருண்
தவான்.