அல்லு அர்ஜுன் மீது மீண்டும் காவல்துறையில் ஒரு புகார் | குழந்தைகளுடன் ஒன்றாக திருமண நிகழ்வில் கலந்து கொண்ட சூர்யா-ஜோதிகா | விஜய் சார், உங்க முன்னாடி நாங்க குழந்தைங்கதான் - வருண் தவான் | தனுஷை நோக்கி படையெடுக்கும் புதிய பட வாய்ப்புகள் | விமர்சனங்களுக்கு மத்தியில் 100 கோடியை நெருங்கும் 'முபாசா' | கணவர், குழந்தைகளுடன் பாரிஸிற்கு சுற்றுலா சென்ற நயன்தாரா | இளம் வயதில் இரவு முழுக்க குடிப்பேன் - அமீர் கான் ஓபன் டாக் | என் பெயரை பயன்படுத்தி அரசு திட்டத்தில் மோசடி : கண்டித்த சன்னி லியோன் | மீண்டும் இணையும் அஜித் - ஆதிக் கூட்டணி | வளர்ப்பு நாய் இறப்பு: திரிஷா வருத்தம் |
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. படத்தின் மிகப்பெரிய வெற்றி, அதற்கு கிடைத்த வரவேற்பு, வசூல் என ஒரு பக்கம் படக்குழுவினருக்கு சந்தோஷம் அளிக்கும் விஷயங்கள் நடந்தன. இருந்தாலும் ஹைதராபாத் திரையரங்கு ஒன்றில் முதல் நாள் காட்சி பார்க்க வந்த ஒரு இளம் பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானது, அதன்பிறகு அல்லு அர்ஜுன் மீது அது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது, தற்போது போலீசார் விசாரணைக்கு அவர் ஆஜராகி வருவது என சில கசப்பான சர்ச்சையான நிகழ்வுகளும் இன்னொரு பக்கம் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் தற்போது புஷ்பா படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி தொடர்பாக அல்லு அர்ஜுன் மற்றும் படத்தின் இயக்குனர் சுகுமார் இருவர் மீதும் காவல்துறையில் தெலங்கான காங்கிரஸ் தலைவர் தீன்மார் மல்லியன்னா என்பவர் ஒரு புகார் அளித்துள்ளார். படத்தில் ஒரு காட்சியில் அல்லு அர்ஜுன் தன்னை விசாரிக்க வரும் ஒரு அதிகாரியை நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டு அதன் பிறகு நீச்சல் குளத்தில் சிறுநீர் கழிப்பது போன்று ஒரு காட்சி இடம் பெற்று இருக்கிறது. இது காவல் துறை அதிகாரிகளை மட்டமாக சித்தரிக்கும் போக்கு என்று கூறி புகார் அளித்துள்ள அவர், இதுகுறித்து அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குனர் சுகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்சார் செய்யப்பட்டு வெளியான ஒரு காட்சிக்கு இப்படி வழக்கு தொடர முடியுமா ? இல்லை இது வீண் பப்ளிசிட்டிக்காக தொடரப்படும் வழக்கா ? இல்லை அல்லு அர்ஜுன் மீது தொடர்ந்து ஏதோ ஒரு வகையில் களங்கம் ஏற்படுத்துவதற்காக செய்யப்படும் முயற்சியா என்று பல்வேறு கருத்துக்கள் நெட்டிசன்களால் பேசப்பட்டு வருகின்றன.