சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி இணைந்து நடித்து கடந்த ஆண்டில் வெளிவந்த 'விடுதலை' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகம் ரிலீஸூக்கு தயாராகவுள்ளது. இந்த இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கென் கருணாஸ், பவானி ஸ்ரீ ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.
இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் மாதம் 20ம் தேதி அன்று திரைக்கு வருவதையொட்டி தற்போது இந்த படத்தின் புரோமொசன் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் இந்த படம் வெளியீட்டிற்காக இப்போது தணிக்கை பணிகளும் முடிவடைந்தது. ஒரு வசனத்தை நீக்க மறுத்ததால் விடுதலை 2 படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் அளிக்கப்பட்டது. மேலும், இப்படம் 2 மணி நேர 24 நிமிடங்கள் நீளம் கொண்ட படமாக உருவாகியுள்ளது என்கிறார்கள்.