என் மீதான காழ்ப்புணர்ச்சி : ‛டிக் டாக்' இலக்கியா விவகாரத்தில் திலிப் பதில் | 'ஸ்கூல் கட்' அடித்து 'பாட்ஷா' பார்த்த பஹத் பாசில் | 'தலைவன் தலைவி' தெலுங்கு ரிலீஸ் : ஆகஸ்ட் 1க்கு தள்ளி வைப்பு | 250 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | வார் 2 டிரைலர் : 24 மணி நேரத்தில் 50 மில்லியன் பார்வைகள் | 'ரட்சகன்' பார்த்து நாகார்ஜுனா ரசிகரான லோகேஷ் கனகராஜ் | ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் |
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து திரைக்கு வந்த படம் 'மகாராஜா'. 100 கோடி வசூல் சாதனை செய்த இந்த படம் தற்போது சீன மொழியில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அடுத்து ஜப்பான் மொழியிலும் வெளியாக உள்ளது. இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'விடுதலை- 2' படம் டிசம்பர் 20ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து வரும் விஜய் சேதுபதி நேற்று தெலுங்கு புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் மீடியாக்களை சந்தித்தபோது, ராம்சரணின் 16வது படத்தில் நடிக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பிய போது, அந்த படத்தில் நான் நடிக்கவில்லை என்று பதிலளித்த விஜய் சேதுபதி, ''நான் சில படங்களில் ஹீரோவாக நடித்து வருவதோடு, பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறேன். போதுமான நேரமில்லாமல் பல படங்களை தவிர்த்து வருகிறேன். அதோடு சில படங்கள் கதை சிறப்பாக இருந்தாலும் என்னுடைய கதாபாத்திரம் வலுவாக இல்லாததால் அந்த படங்களை தவிர்த்து விடுகிறேன்'' என்று கூறியிருக்கிறார்.