பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
கடந்த சில நாட்களுக்கு முன்பாக அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதேசமயம் இந்த படம் வெளியான நாளன்று முதல் நாள் ரசிகர் காட்சி பார்க்க வந்த ஹைதராபாத்தை சேர்ந்த ரேவதி என்ற பெண் தியேட்டர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் எந்தவித முன்னறிவிப்புமின்றி அந்த தியேட்டருக்கு படம் பார்க்க நடிகர் அல்லு அர்ஜுன் வந்ததும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் தான் இந்த மரணம் நிகழ்ந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் அவர் இந்த வழக்கின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கிடைப்பதில் சற்று தாமதமானதால் ஒருநாள் இரவு முழுவதும் அவர் சிறையில் தங்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மறுநாள் காலை அவர் ஜாமீனில் வெளியே வந்தார். பல நட்சத்திரங்களும் சில அரசியல்வாதிகளும் இந்த கைது நடவடிக்கையை கண்டித்தும் பின்னர் அவர் விடுதலை குறித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பொதுவாக இது போன்ற விஷயங்களில் கிண்டலுடன் கருத்துக்களை தெரிவிக்கும் சர்ச்சை புகழ் இயக்குனர் ராம்கோபால் வர்மா இந்த கைது குறித்து கூறும் போது, “ஏற்கனவே புஷ்பா-2 படம் வெற்றி படமாக ஓடிக் கொண்டிருக்கிறது. எப்படியும் கைது செய்தாலும் உடனே அவர் ஜாமீனில் வரப்போகிறார் என்று எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். அப்புறம் எதற்காக இந்த கைது என்றால் புஷ்பா 2 படத்தின் இரண்டாவது வார கலெக்ஷனும் குறைவில்லாமல் இருக்க வேண்டும் என தெலுங்கானா முதல்வர் நினைத்து விட்டார் போலும். எப்படியோ ஏற்கனவே பிரபலமாக இருந்த அல்லு அர்ஜுனை இந்த கைது நடவடிக்கை மூலம் இன்னும் மெகா பிரபலம் ஆகிவிட்டார். இரண்டாவது வார கலெக்ஷனுக்கும் வசதி செய்து கொடுத்துவிட்டார்” என்று கிண்டலாக கூறியுள்ளார்.