ஜனநாயகன்: வழக்கு போடாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'ரவுடி பேபி' லிரிக் வீடியோ | விபீஷணனாக நடிக்கவில்லை ; விஜய்சேதுபதி திட்டவட்டம் | மோகன்லால் மம்முட்டிக்கு நான் வில்லன் தான் ; உறுதி செய்த பஹத் பாசில் | பிப்ரவரி 26ல் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம்? | அப்படி ஒன்றும் அவசியம் இல்லை ; ஓடிடி நிறுவனத்தை அதிர வைத்த 'சூ ப்ரம் சோ' தயாரிப்பாளர் | ஜனநாயகன் பட வழக்கை வாபஸ் பெற்றது தயாரிப்பு நிறுவனம் | டொவினோ தாமஸ் படத்தில் இணைந்த 'சர்வம் மாயா' நாயகி | பிளாஷ்பேக் ; ரஜினி ரசிகர்களின் எதிர்ப்பை மனதில் வைத்து பாக்யராஜ் புத்திசாலித்தனமாக செய்த காரியம் | 'பேட்ரியாட்' டப்பிங்கை நிறைவு செய்த மோகன்லால் |

மலையாள திரையுலகில் பிக் பி, அன்வர், வரதன், காம்ரேட் இன் அமெரிக்கா, ஐயூப்பின்டே புத்தகம் உள்ளிட்ட பல வித்தியாசமான கதையம்சம் கொண்ட வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் அமல் நீரத். இவரது இயக்கத்தில் சமீபத்தில் போகன் வில்லா என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் குஞ்சாக்கோ போபன், பஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். கதாநாயகியாக முக்கிய கதாபாத்திரத்தில் தலைநகரம், நான் அவன் இல்லை பட புகழ் நடிகை ஜோதிர்மயி நடித்திருந்தார். இந்த படத்திற்காக மொட்டை எல்லாம் அடித்து சில காட்சிகளில் குட்டை தலை முடியுடன் என தனது தோற்றத்திலும் நடிப்பிலும் வித்தியாசம் காட்டி இருந்தார் ஜோதிர்மயி. இந்தப் படத்தின் இயக்குனர் அமல் நீரத் இவரது கணவரும் கூட. அது மட்டுமல்ல இந்த படத்தை பஹத் பாசிலும் அமல் நீரத்தும் இணைந்து தான் தயாரித்திருந்தனர்.
இந்த நிலையில் படப்பிடிப்பின் போது நடைபெற்ற ஒரு சுவாரசிய சம்பவம் குறித்து ஜோதிர்மயி கூறும்போது, “நானும் பஹத் பாசிலும் நடிக்கும் காட்சிகளை படமாக்கிய போது ஒரு முறை சீரியஸ் ஆன காட்சியில் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அறியாமலேயே அடிக்கடி சிரித்து விட்டோம். இதனால் அந்த காட்சியை பலமுறை எடுக்க வேண்டி இருந்தது. இதனால் கோபமான இயக்குனர், என் கணவர் அமல் நீரத் எங்களிடம் வந்து, ரெண்டு பேரும் கொஞ்சம் சீரியஸ் ஆக இருங்கள். நீங்கள் இருவரும் இந்த படத்தின் தயாரிப்பாளர் என்பதை மறந்து விடாதீர்கள்” என்று சொன்னார். அதன் பிறகு தான் நாங்கள் கொஞ்சம் சீரியஸ் ஆகி அந்த காட்சியில் நடித்து முடித்தோம்” என்று கூறியுள்ளார்.




